உருளைக்கிழங்கு சாப்பிட்டால் உடல் எடை குறையுமா?
உருளைக்கிழங்கு பெரும்பாலான வீடுகளில் பயன்படுத்தப்படும் ஒரு காய்கறி.
வயது வித்தியாசம் இல்லாமல், உருளைக்கிழங்கு கறி அனைவருக்கும் பிடிக்கும். இது உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான காய்கறியாக கருதப்படுகிறது.
சிலர் பொரியல் செய்தும், சிலர் கிரில் செய்தும், சிலர் வேகவைத்தும் சாப்பிடுவார்கள்.
குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் உருளைக்கிழங்கு பிடிக்கும். ஆனால் அதை அதிகமாக சாப்பிடுவது உடல் பருமனுக்கு வழிவகுக்கும் என்றும் கூறப்படுகிறது.
அது எந்தளவிற்கு உண்மை என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
உருளைக்கிழங்கு சாப்பிடுவதால் எடை கூடுமா?
மற்ற காய்கறிகளுடன் ஒப்பிடுகையில், உருளைக்கிழங்கில் கார்போஹைட்ரேட் மற்றும் கலோரிகள் இரண்டும் அதிக அளவில் இருப்பதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதில் பொட்டாசியம், நார்ச்சத்து, மாங்கனீஸ், வைட்டமின் பி6, வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளிட்ட பிற ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
குடலின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் ரெசிஸ்டன்ஸ் வகை மாவுச்சத்து உருளைக்கிழங்கிலும் உள்ளது.
உருளைக்கிழங்கில் பல வகையான சத்துக்கள் உள்ளன. எல்லோருக்கும் இதைப் பற்றி தெரியும், ஆனால் உருளைக்கிழங்கு எப்போது கெட்டதாகும் என்பது தெரியுமா?
வீட்டில் தயாரிக்கப்பட்ட உருளைக்கிழங்கு கறி நூடுல்ஸ் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவாக மாற்றப்பட்டால், உடல் எடை அதிகரிக்கப்படும்.
பெரும்பாலான பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆரோக்கியமற்றவை.
ஆரோக்கியமான உணவுப் பொருளாக இருந்தாலும் சரி. இந்த பட்டியலில் instant நூடுல்ஸும் வரும்.
950 கிராம் சோடியம் instant நூடுல்ஸில் உள்ளது, இது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
இதனுடன், இரசாயனங்கள், அமிலத்தன்மை சீராக்கி, தடிப்பாக்கி, கேக்கிங் எதிர்ப்பு முகவர், செயற்கை வண்ணம் மற்றும் ஈரப்பதமூட்டும் பொருட்கள் உள்ளன. எனவே இதை பயன்படுத்துவதை குறைத்துக்கொள்வது நல்லது.
மற்ற காய்கறிகளுடன் உருளைக்கிழங்கைக் கலக்கும்போதும் உணவில் புரதம் நிறைந்ததாக இருக்க வேண்டும்.
மேலும் உருளைக்கிழங்கை நீங்கள் எப்படி சாப்பிடுகின்றீர்கள் என்பதை பொறுத்தே உடல் எடை அதிகரிப்பும் குறைதலும் காணப்படுகின்றது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |