ஒருநாளைக்கு எத்தனை க்ரீன் டீ குடிப்பது நல்லது?
இன்றைகாலத்தில் பெரும்பாலானோர் தினமும் டீ, காபி குடிப்பதைத் தவிர்த்து க்ரீன் குடிப்பதை வழக்கமாக்கி கொண்டுள்ளனர்.
குறிப்பாக புத்துணர்ச்சி மற்றும் உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க நினைப்பவர்கள் க்ரீன் டீயைத்தான் தேர்வு செய்கின்றனர்.
உண்மையில் க்ரீன் டீ உடல் எடையை குறைக்க உதவுமா? இதனை எவ்வளவு எடுத்து கொள்வது நல்லது என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
எவ்வளவு குடிக்கவேண்டும்?
ஒரு நாளைக்கு இரண்டு கப் க்ரீன் டீ சேர்த்துக்கொள்வது சிறந்தது. க்ரீன் டீயை பகல்நேரத்தில் குடிப்பதே சிறந்தது.
உணவுக்கு 2 மணிநேரத்திற்கு முன்போ அல்லது 2 மணிநேரத்திற்கு பின்போதான் க்ரீன் டீயை எடுத்து கொள்ள வேண்டும். ஏனெனில் உணவுக்கு இடையில் குடித்தால் உணவின் ஊட்டச்சத்துகள் உடலில் சேர்வது தடுக்கப்படும்.
மேலும் இதனை எக்காரணம் கொண்டும் வெறும் வயிற்றில் குடிக்கக்கூடாது.
நன்மைகள்
- நுரையீரல் புற்றுநோய், வயிறு, உணவுக்குழாய் மற்றும் பெருங்குடல் பிரச்னைகளை தடுக்கும்.
- சிறுநீரகம், கணையம் மற்றும் மார்பக பிரச்னைகளை தடுக்கும்.
- மெட்டபாலிசத்தை அதிகரிப்பதால் உடல் எடையைக் குறைக்க உதவும்.
- வயதான தோற்றத்தை குறைத்து, இதய நோய்கள் வராமல் தடுக்கக்கூடியது.
- மூளை செயல்பாட்டை அதிகரிப்பதுடன், நீரிழிவு 2 நோயையும் தடுக்கும்.
குறிப்பு
- ஒருநாளில் மூன்று கப்பிற்கும் அதிகமாக க்ரீன் டீ குடித்தால் இரவில் தூக்கம் வராமல் அவதிப்பட நேரிடும் எனவே எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
- வயிற்றெரிச்சல் பிரச்னை இருப்பவர்கள் தவிர்ப்பது நல்லது.