கிரீன் டீயை தெரிந்து கூட இந்த நேரத்தில் குடித்து விடாதீங்க.. உயிருக்கே உலைவைக்கும் ஆபத்து!
விதவிமான டீ வகைகள் அறிமுகமானாலும் இன்னும் பலர் பாரம்பரிய தேநீர் வகைகளை மட்டுமே விரும்புகின்றனர். அதேநேரத்தில் கிரீன் டீ மீதான மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் கிரீன் டீயில் பல ஆரோக்கியமான நன்மைகள் இருப்பது தான்.
உடல் எடையை குறைப்பது முதல் இறுக்கமான நரம்புகளை தளர்த்தி ரிலாஸ் ஆக்குவது வரை என்று பல்வேறு வகையில் ஆரோக்கியத்துக்கு உதவும் நன்மைகளை தருகின்றது. ஆனால் எந்த நேரத்தில் கிரீன் டீ குடிக்க வேண்டும் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க..
நன்மைகள்:-
- இந்த இலைகள் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் ஊட்டச்சத்துக்களின் நன்மைகளால் நிரம்பியுள்ளது. ஒரு கப் க்ரீன் டீ நரம்புகளைத் தளர்வடைய செய்வது மட்டுமின்றி மூளையின் செயல்பாட்டையும் அதிகரித்து செல் சேதத்தைக் குறைக்கிறது.
- கிரீன் டீயில் கேடசின்கள் என்ற கலவை உள்ளது. இது தான் நரம்புகளை தளர்த்துவதில் முக்கிய பங்காற்றுகிறது. மேலும் மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும், மன அழுத்தத்தை குறைத்து ஞாபக சக்தியை அதிகரிப்பதோடு தூக்கத்தையும் தூண்டுகிறது.
- கிரீன் டீயில் காஃபீன் குறைந்தளவு மட்டுமே இருப்பதால் படுக்கைக்கு செல்லும் முன் குடிக்கலாம். காஃபின் அதிகம் இருந்தால் ஒரு நபரின் தூக்கம் பாதிக்கப்படும். காஃபீன் மூளையின் விழிப்புணர்வை தூண்டுவதால் தூக்கமின்மை ஏற்படுகிறது.
-
மேலும், தூங்கும் நேரத்தில் அதிக திரவம் அல்லது பானங்களை எடுத்துக்கொண்டால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும். இதனால், தூங்கச் செல்லும் முன் 2 முதல் 3 மணி நேரத்துக்கு முன்பு தேநீர் உள்ளிட்ட பானங்களை எடுத்துக் கொள்வது நல்லது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.