உலகையே அச்சுறுத்தும் ஹைபர்சோனிக் மிஸைல் இந்தியாவிடம் உள்ளதா?
ஒரு நாடு தீவிரமான போர் ஆயுதங்களினை தன்னகத்தே வைத்திருக்க காரணம் தங்களிடம் மற்றைய நாடுகள் மோதக்கூடாது மற்றும் தங்களை பலம் வாய்ந்த நாடுகளாக காட்டிக்கொள்வதற்குமே ஆகும்.
5ம் தலைமுறைக்கான போர் விமானங்கள் மற்றும் அணு ஆயுதங்கள் போன்றவை சாதாரணமாக போருக்கு பயன்படும் ஆயுதங்களாகும்.
இவை அனைத்தையும் விட பலம் வாய்ந்த ஆயுதம் தான் ஹைபர்சோனிக் மிஸைல் ஆயுதம் ஆகும்.
இது பிரபலமடைய காரணம் என்ன?
இந்த ஹைப்பர் சோனிக் மிஸைல் பிரபலமாக காரணம் என்னவெனில் உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்ட போரில் ஹைபர் சோனிக் மிஸைலை தான் அதிகமாக பயன்படுத்தியுள்ளனர்.ரஷ்யா சரமாரியாக இந்த ஏவுகணைகள் பயன்படுத்தியதாக உக்ரைன் படைகள் தெரிவித்துள்ளன.
ஹைப்பர்சோனிக் ஏவுகணை எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது?
ஹைப்பர்சோனிக் மிஸைலானது வான் வழி யுத்தங்களுக்கு அதிகமாக பயன்படுத்துகிறார்கள்.
ஹைபர் சோனிக் மிஸைலானது ஒலியை விட குறைந்தது 5 மடங்கு வேகத்தில் செல்கிறது.
அதாவது எதிரி நாடுகளானது இதனை சுதாரித்துக்கொண்டு அழிக்க முதலிலேயே இந்த மிஸைலானது தாக்குதல் மேற்கொள்ள ஆரம்பித்துவிடும்.
அமெரிக்கா சீனா,ரஷ்யா போன்ற நாடுகளிடம் இந்த ஆயுதம் அதிகாரப்பூர்வமாக இருக்கிறது.
ஜப்பான்,தென் கொரியா ,அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் இந்த மிஸைலை உருவாக்கும் நடவடிக்கையில் இருக்கிறது.
ஹைபர் சோனிக்கை சொந்த நாட்டில் உருவாக்க முயற்சி முக்கியமாக ஒரு நாடு மட்டும் இந்த ஹைபர் சோனிக்கை உருவாக்குவதில் அடுத்த கட்டத்திற்கு போய்விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
அந்த நாடு இந்தியாதான்.இந்தியாவில் பலவிதமான ஏவுகணைகள் காணப்பட்டாலும் இந்தியாவிடம் காணப்படும் முக்கியமான ஏவுகணை பிரம்மோஸ் ஏவுகணை.
பிரம்மோஸ் 2 எனும் பெயரில் உருவாக இருக்கும் ஆயுதம் ஹைபர் சோனிக்காக தான் இருக்க வேண்டும் என கூறப்படுகிறது.
இந்த பிரம்மோஸ் 2 ஆனது ஒலியை விட 8 மடங்கு வேகத்தில் செல்லக்கூடியது என கூறுகிறார்கள் விஞ்ஞானிகள்.
முக்கியமாக ஒரு நாடு மட்டும் இந்த ஹைபர் சோனிக்கை உருவாக்குவதில் அடுத்த கட்டத்திற்கு போய்விட்டது ஏற்கெனவே அக்னி 5 வலிமையான ஆயுதத்தையும் இந்தியா கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஏவுகணையானது பூமி ஏவப்பட்ட இடத்திலிருந்து 5000 முதல் 7000 KM வரை செல்லும்.
இந்த அக்னி 5 ஆனது ஹைபர்சோனிக் ஏவுகணைக்கு சமமானது எனவும் கூறப்படுகிறது.