வயிற்று பகுதி உள்ள அதிகப்படியான சதையை குறைக்கனுமா? இந்த பயிற்சியை தொடர்ந்து மறக்கமால் செய்திடுங்க போதும்!
Weight Loss
Exercises
By Balamanuvelan
பொதுவாக உடல் எடையை குறைப்பு பல யோகாசனங்கள் பெரிதும் உதவியாக இருக்கின்றது.
அதிலும் வயிற்று பகுதியில் கொழுப்பை கரைக்க யோகசானத்தில் “இந்துதலாசனம்” என்ற அல்லது நின்ற பிறை ஆசனம் என்று பயனளிக்கின்றது.
இது உங்கள் உடலின் பக்கவாட்டு, தோள்கள் மற்றும் மேல்கைகளுக்கு சிறந்த நீட்சி அளிக்கிறது.
அதிகாலையில் இதை செய்வது உங்களை மலச்சிக்கலிலிருந்து நிவாரணமளிக்க உதவும்.
தற்போது இதனை எப்படி செய்யலாம் என்பதை இங்கே பார்ப்போம்.
செய்முறை
- விரிப்பில் நின்று கொண்டு கால்களை ஓன்றாக சேர்த்து வைத்து நேராக நின்று மூச்சை உள்ளிழிக்கும் போது மெதுவாக உங்கள் கைகளை உயர்த்தி உள்ளங்கைகளை ஒனறாக இணையுங்கள்.
- மூச்சை உள்ளிழிக்கும் போது உங்கள் இடது புறம் வளைந்து ஒரு பிறை சந்திரன் வடிவை உங்கள் உடலுடன் உண்டாக்குங்கள். உங்கள் இடுப்பை மட்டும் வளைத்து கால்கள் வளையாமல் நேராக நின்று கொள்ளுங்கள்.
- மெதுவான 10-10 மூச்சுகளுக்கு அங்கேயே இருங்கள். மூச்சை உள்ளிழுக்கும் போது, மெதுவாக உங்கள் உடலை மேலே கொண்டு வந்து மூச்சை விட்டு பின் மெதுவாக உங்கள் வலது புறமாக வளையுங்கள். அங்கேயே 8-10 மெதுவான ஆழமான மூச்சுகள் வரை இருங்கள்.
- திரும்ப மேலே வந்து மெதுவாக கைகளை கீழே விடுங்கள். இது ஒரு சுற்றை நிறைவடைய செய்யும்.
- இந்த ஆசனத்தை 6-7 முறைகள் உங்கள் மூச்சின் மேல் கவனம் செலுத்தி செய்ய வேண்டும்.
பயன்கள்
- வயிற்று பகுதியில் இருக்கும் அதிகப்படியாக சதை குறையும்.
- தோள்பட்டைகள், கைகளுக்கு வலிமை தரும்
- மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் செய்து வந்தால் நல்லது.
முக்கிய குறிப்பு
இடுப்பு, தோள் அல்லது முதுகு காயம் இருந்தால் இந்த ஆசனம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US