தமிழன் அஸ்வினை புறக்கணித்த கோஹ்லி? சரியான பதிலடி கொடுத்த சம்பவம்: ரஹேனாவுக்கு குவியும் பாராட்டு
இந்திய அணி வீரரான அஸ்வினை கோஹ்லி சரியாக பயன்படுத்தவில்லை என்று கூறப்பட்டு வந்த நிலையில், ரஹேனே அவரை சரியாக பயன்படுத்தியதால், அவரை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
அவுஸ்திரேலியா அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் ஆடிய அவுஸ்திரேலியா அணி 195 ஓட்டங்களும், அதன் பின் ஆடிய இந்திய அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 36 ஓட்டங்களும் எடுத்தது.
இந்த தொடரில் கோஹ்லி, அஸ்வினை சரியாக பயன்படுத்தவில்லை, முதல் டெஸ்ட்டில் அஸ்வினை முன்னரே கொண்டு வந்திருக்க வேண்டும், அவரை இன்னும் நன்றாக பயன்படுத்தியிருக்க வேண்டும் என்று கூறப்பட்டது.
இந்நிலையில், கோஹ்லி நாடு திரும்பிய நிலையில், ரஹானே தற்போது இந்திய அணிக்கு கேப்டனாக உள்ளார். அவர் அஸ்வினை 15 ஓவர் குள்ளே கொண்டு வந்து பந்து வீசி, அதிரடி வீரரான மேத்யூ வேட், இந்திய அணி என்றாலே ஓட்டங்களை குவிக்கும் ஸ்மித்தை டக் அவுட்டாக்கியும் வெளியேற்றினார்.
இதனால் ரசிகர்கள் உட்பட முன்னணி கிரிக்கெட் வீரர்கள் பலரும் ரஹானேவின் கேப்ட்ன்சிப்பை பாராட்டி வருகின்றனர்.
கோஹ்லி கேப்டனாக இருக்கும் போது அஸ்வினுக்கு 30 ஓவர்களுக்கு பின்தான் பவுலிங் கொடுப்பார். பலமுறை அஸ்வினை கோஹ்லி வேண்டும் என்றே புறக்கணித்துள்ளார். இப்போதும் கூட துணை கேப்டன் பதவி அஸ்வினுக்கு வழங்கப்படவில்லை. கோஹ்லி இல்லாத நிலையில் அஸ்வினை ரஹானே பயன்படுத்தி உள்ளார்.
அதன் மூலம் திறமையை நிரூபித்து அஸ்வின் பதிலடி கொடுத்துள்ளார்.