எடையை குறைக்க எலுமிச்சை உண்மையில் உதவுகிறதா? அவசியம் தெரிஞ்சிக்கோங்க

Kirthiga
in ஆரோக்கியம்Report this article
இன்றைய காலக்கட்டத்தில் இருக்கும் பெண்கள் மற்றும் ஆண்கள் தங்களது உடம்பை சீராகவும் அழகாகவும் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள்.
அதற்காக பல விடயங்களையும் வீட்டிலேயே செய்வதுண்டு. ஆனால் ஒரு சிலர் செயற்கை முறையில் உடல் எடையை குறைக்க வேண்டும் எ்ற நோக்கில் கடைகளில் விற்கப்படும் மாத்திரைகளை உபயோகின்றனர்.
ஆனால் அது அவர்களின் உடம்பிற்கு பக்கவிளைவுகளை தான் ஏற்படுத்தும். எனவே வீட்டின் சமையலறையில் இருக்கும் ஒரு சில இயற்கையான பொருட்களை வைத்து எப்படி சீக்கிரமாக உடல் எடையை குறைக்கலாம் என தெரிந்துக்கொள்வோம்.
எடை குறைக்க உதவும் எலுமிச்சை?
ஒரு டேபிள் ஸ்பூன் லெமன் ஜூஸ், இரண்டு துண்டு இஞ்சி, 2-3 கிராம்பு ஆகியவற்றை சூடான நீரில் கலந்து தினமும் இரவு குடித்து வந்தால் உடல் எடை குறையும் என பலரும் கூறி வருகின்றார்கள்.
உண்மையில் அது சாத்தியமாகுமா? அதில் குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களும் ஆரோக்கியமான வாழ்க்கைமுறை உதவுவதாகும்.
இதில் பயன்படுத்தும் அனைத்தும் செரிமானம், மெடபாலிஸம் ஆகியவற்றிற்கு உதவி புரிகிறது. ஆனால் இந்த கலவையை குடிப்பதனால் மாத்திரம் எடை குறைகிறது என்று கூற முடியாது.
முதலில் இந்த பானத்தில் பயன்படுத்தப்படும் பொருட்களின் நன்மைகள் குறித்து ஆராய வேண்டும்.
இஞ்சி
இஞ்சி அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்ததாகும். செரிமானத்திற்கு உதவி மெடபாலிஸத்தை அதிகரிக்கும். எடையை குறைக்க இதன் தாக்கம் குறைவாக இருக்கும்.
கிராம்பு
ஆண்டி ஆக்ஸிடெண்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகமாகவே இதில் காணப்படுகிறது. ஆனால் எடையை குறைக்க உதவுமா என்பது குறித்து தெரியவில்லை.
எலுமிச்சை
எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகமாக இருக்கிறது. ஆரோக்கியமான டயட்டின் பகுதியாக எலுமிச்சையை பலரும் எடுத்துக்கொள்கிறார்கள்.
வெந்நீர்
கொதிக்க வைத்திருக்கும் வெந்நீரை குடிப்பதனால் உடம்பில் நீர் சத்தானது அதிகரிக்கிறது. எடை குறைப்பில் வெந்நீர் குடிப்பது ஒரு வழக்கமாகவே இருந்து வருகிறது.
இதில் குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களும் பெரும்பாலும் மெடபாலிஸத்திற்கும் செரிமானத்திற்கும் தான் உதவுகிறது.
நீங்கள் உடனடியாக எடையை குறைக்க விரும்புகின்றீர்கள் என்றால கட்டாயம் டயட், ஆரோக்கியமான பழக்க வழக்கம், சீரான உடற்பயிற்சி போன்றவற்றில் ஈடுபட வேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |