ஜெலன்ஸ்கியைக் காதலிக்கிறாரா புடினுடைய மகள்?: பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி
ரஷ்ய ஜனாதிபதியான புடினுடைய மகள், ஜெலன்ஸ்கியை காதலிப்பதாக ஒரு செய்தி வெளியாகி பரபரப்பை? ஏற்படுத்தியுள்ளது.
உண்மையாகவே புடினுடைய மகள் ஜெலன்ஸ்கியைக் காதலிக்கிறாரா?
ஆம், உண்மையாகவே புடினுடைய மகளான கேத்தரினா (Katerina Tikhonova, 35) ஜெலன்ஸ்கியைத்தான் காதலிக்கிறார். ஆனால், அது உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கி அல்ல.
கேத்தரினா, ரஷ்யாவின் முன்னணி பாலே நடனக் கலைஞரான இகோர் ஜெலன்ஸ்கி (Igor Zelensky, 52) என்பவரைக் காதலிக்கிறாராம். இருவருக்கும் ஒரு குழந்தை கூட உள்ளதாம்.
இதற்கு முன் கேத்தரினா ரஷ்யாவின் இளம் கோடீஸ்வரரான Kirill Shamalov (40) என்பவரை திருமணம் செய்திருந்தார்.
2017ஆம் ஆண்டு, கேத்தரினா ஜெலன்ஸ்கியை காதலிக்கத் தொடங்கியதைத் தொடர்ந்து தம்பதியர் பிரிந்திருக்கிறார்கள்.
புடினுக்கு மேற்கத்திய நாடுகளில் வாழும் ரஷ்யர்கள் மீது அவ்வளவு வெறுப்பாம். ஆனால், அவரது மகளான கேத்தரினாவே ஜேர்மனியின் Munich நகரில் வாழும் ஜெலஸ்கியை சந்திப்பதற்காக பல முறை அங்கு சென்றுள்ளார். சொல்லப்போனால், உக்ரைன் போருக்கு முன் வரை கேத்தரினா ஜேர்மனியில் தன் காதலரான ஜெலன்ஸ்கியுடன் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த ஜெலன்ஸ்கி ஜார்ஜியா நாட்டுப் பின்னணி கொண்டவர் என்பதும், ஜெலன்ஸ்கி என்ற பெயரைத் தவிர, அவருக்கும் உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.