BRA அணிவதால் மார்பக புற்றுநோய் ஏற்படுமா? பெண்களுக்கான முக்கிய தகவல்
உலக சுகாதார அமைப்பு அறிக்கையின் படி, கடந்த 2020ஆம் ஆண்டு மட்டும் 2.3 மில்லியன் பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மரபணு மாற்றங்களால் கட்டுப்பாடற்ற செல் வளர்ச்சி ஏற்படும்பொழுது, அது மார்பகப் புற்றுநோய்க்கு வழிவகுக்கிறது.
ஹார்மோன் தாக்கங்கள், மரபணு, சுற்றுச்சூழல், மது அருந்துதல் , புகைபிடித்தல் உள்ளிட்ட ஆரோக்கியமற்ற தேர்வுகளின் விளைவுகளால் இந்த புற்றுநோய் உண்டாகிறது.
இது பெரும்பாலும் 50 வயதிற்கு மேல் உள்ள பெண்களுக்கு ஏற்படுகிறது. எனினும் இளம்பெண்களுக்கு ஆண்களுக்கும் கூட இந்த புற்றுநோய் ஏற்படுகிறது.
புற்றுநோயின் ஆரம்ப கட்டத்திலேயே மார்பகத்தில் வலி ஏற்படாது. புற்றுநோய் பரவும்போது வலி தொடங்குகிறது.
மேலும் சுற்றியுள்ள திசுக்கள் மற்றும் எலும்புகளுக்கு பரவுகிறது. தொடர்ந்து மார்பகத்தில் வலி ஏற்பட்டால் தாமதிக்காமல் மருத்துவ நிபுணரின் ஆலோசனையைப் பெற வேண்டியது அவசியம்.
ஆரம்பத்திலேயே கண்டறியப்படும் மார்பக புற்றுநோயை குணப்படுத்த முடியும் என்று நிபுணர் குறிப்பிட்டுள்ளார்.
மார்பக புற்றுநோயின் சில அறிகுறிகள்
- மார்பகங்களின் அளவு மற்றும் வடிவத்தில் ஏற்படும் மாற்றம்.
- மார்பகம் மற்றும் அக்குள்களில் ஏற்படும் சிறு கட்டி போன்றவை
- தாய்ப்பால் அல்லது முலைக்காம்பு வெளியேற்றம்
- தொடர்ந்து மார்பக வலி ஏற்படுதல்
- மார்பக பகுதிகளில் தோலில் ஏற்படும் மாற்றங்கள்
BRA அணிவதால் மார்பக புற்றுநோய் ஏற்படுமா?
BRA அணிவதால் மார்பகங்களில் கட்டிகள் ஏற்படாது.
நீர்க்கட்டிகள், ஹார்மோன் மாற்றங்கள், புற்றுநோய் அல்லது ஃபைப்ரோடெனோமா போன்ற காரணங்களால் கட்டிகள் ஏற்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |