Madras Eye வந்தால் உடனே இதை செய்யுங்கள்: மருத்துவர் கூறும் ஆலோசனை
இந்த பருவ காலத்தில் Madras Eye என்று அழைக்கப்படும் கண் நோய் அதிகரித்து காணப்படுகிறது.
இதனால் பலர் அவதிப்பட்டு வருகின்றனர். வேகமாக பரவக்கூடிய இந்த கண் நோய் வருமுன் காத்துகொள்ள முடியும்.
இந்த நோய் வந்தால் கண் சிகப்பாக மாறும், கண் உறுத்தல், கண் வலி, கண் எரிச்சல் போன்றவை ஏற்படும்.
மருத்துவரின் ஆலோசனை
இதுகுறித்து கண் மருத்துவர் கூறுகையில், "இந்த கண் நோய் வந்தவர்கள் தங்களது கண்ணில் கை வைத்துவிட்டு அவர்கள் தொடும் இடங்களில் வேறு யாரேனும் தொட்டால் அவர்களுக்கும் இந்த நோய் எளிதில் பரவும். இது ஒரு விதமான பரவும் தன்மையுள்ள வைரஸ் ஆகும்.
இந்த கண் நோய் வராமல் தடுக்க தங்களது கைகளை அடிக்கடி கழுவி சுத்தமாக வைக்க வேண்டும். கண் நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
மேலும் ஆரம்ப நிலையிலேயே இதை தடுக்க முடியும். அதற்கு திரிபுலா கசாயம் தயார் செய்து அதன் மூலம் கண்களை கழுவ வேண்டும் என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |