உக்ரைனில் கொல்லப்பட்ட உரிமையாளரை விட்டு பிரியமுடியாமல் துடித்த நாய்! வைரலாகும் சோக புகைப்படம்
ரஷ்ய படையினரால் கொல்லப்பட்டு சாலையில் கிடந்த தனது உரிமையாளரின் சடலத்துக்கு அருகில் நாய் ஒன்று நீண்ட நேரமாக அமர்ந்திருந்த காட்சி புகைப்படமாக தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
உக்ரைனில் இன்று 42-வது நாளாக ரஷ்ய இராணுவம் மிருகத்தனமான தாக்குதலை நடத்திவருகிறது. இதனிடையே, ரஷ்ய வீரர்கள் அப்பாவி உக்ரைனிய குழந்தைகள் பெண்கள் முதியோர் என்றும் பார்க்காமல் பொதுமக்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி, சித்திரவதை செய்து கொன்று தெருக்களில் வீசிச்செல்கின்றனர். இது மிகவும் பாதிக்கப்பட்ட நகரங்களில் முக்கியமானது Bucha நகரமாகவும்.
இவ்வாறு ரஷ்ய படையினரின் மனிதாபமற்ற சேய்ல்களை உக்ரைன் தொடர்ந்து தாங்கி வரும் நிலையில், இணையத்தில் மீண்டும் வெளிவந்த ஒரு படம் இதயத்தை உடைக்கிறது. ரஷ்ய துருப்புக்களால் கொல்லப்பட்டதாக கூறப்படும் ஒரு மனிதனின் அருகில் நாய் அமர்ந்திருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
The dog does not leave its owner, who was killed by the #Russian invaders. #Kyiv region. pic.twitter.com/dnVV1X7XLG
— NEXTA (@nexta_tv) April 4, 2022
ஐரோப்பிய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள படத்தில், நாயின் உரிமையாளரை ரஷ்ய படைகள் கொன்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவரது உரிமையாளர் இறந்ததால், நாய் தனது நண்பரைக் கைவிட மறுத்து அவருக்கு அருகில் அமர்ந்ததாக கூறப்படுகிறது. படத்தில் உயிரிழந்த அந்த நபர் கவிழ்ந்த சைக்கிளுடன் நடைபாதையில் கிடந்தார்.
தலைநகர் கீவின் புறநகர்ப் பகுதியான புச்சா நகரில் இந்தப் படம் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. உக்ரேனிய விலங்கு உரிமை அமைப்பான UAnimals பகிர்ந்துள்ள இந்த புகைப்படம், நாய்கள் உண்மையில் மனிதனின் சிறந்த நண்பன் என்பதை காட்டுகிறது.
During heavy fighting in Ukraine, this dog was separated from his owner.
— Goodable (@Goodable) April 5, 2022
For days, his owner thought he'd lost him forever.
What he didn't know was that soldiers had found him and were looking after him.
This is the moment they were reunited.
❤️? pic.twitter.com/gaa9T3QHbK
Ukrainian #Hachiko who didn’t want to leavehis owner’s truck had been found by #ukainianarmy and sent to a shelter. Wishing for this #pup to find his new ❤️ #family ASAP. #StandUpForUkraine #DogsofTwittter #dogs #BanRussia #isolaterussians #shametoberussian #slavaUkraine pic.twitter.com/7AgqwysGat
— JJ Art (@JJ_art_) April 5, 2022