மனித தலையை கவ்விக்கொண்டு ஓடும் நாய்! பொதுமக்களை அதிர வைத்த காட்சி
மனித தலையை வாயில் கவ்வியபடி வீதிகளில் ஓடிய நாயால் பரபரப்பு
நாயை பிடித்து தலையை பத்திரமாக மீட்ட பொலிஸ் அதிகாரிகள்
மெக்ஸிகோவில் நாய் ஒன்று மனித தலையை வாயில் கவ்வியபடி ஓடிய காட்சி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மெக்ஸிகோ நாட்டின் வடக்கே உள்ள ஜாகேட்கஸ் பகுதியில், மனித தலையை வாயில் கவ்வியபடி நாய் ஒன்று ஓடுவதைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து அறிந்த பொலிஸார் நாயைப் பிடித்து அதனிடம் இருந்து மனித தலையை மீட்டனர். ஆனால் அந்த தலை யாருடையது என்றும், பிற உடல் பாகங்கள் எங்கிருக்கிறது என்றும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
குறித்த மனித தலை தடவியல் குழுவிற்கு அனுப்பப்பட்டது. குற்றச் சம்பவத்தின் விளைவாக இது நடந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
எனினும், போதைப்பொருள் கும்பலானது அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் நோக்கில் கொலை செய்யப்பட்டு, தலை துண்டிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மனித தலையை நாய் தூக்கிச் செல்லும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.