திடீரென நீல நிறத்தில் மாறிய நாய்கள்... மக்கள் அதிர்ச்சி: காரணம் என்ன?
அணு உலை வெடிப்பு நிகழ்ந்த செர்னோபில் பகுதியில் சுற்றித்திரியும் சில நாய்கள் திடீரென நீல நிறத்தில் மாறியதால், அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.
திடீரென நீல நிறத்தில் மாறிய நாய்கள்...
சுமார் 38 ஆண்டுகளுக்கு முன், அப்போது சோவியத் யூனியனின் ஒரு பகுதியாக இருந்த செர்னோபில் என்னுமிடத்தில் அமைந்திருந்த அணு உலை ஒன்று வெடித்தது.
அந்த அணு உலை இருக்கும் பகுதியில் சுமார் 700 நாய்கள் வாழ்கின்றனவாம். அந்த நாய்களுக்கு உணவும் மருந்துகளும் வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளன சில தொண்டுநிறுவனங்கள்.
இந்நிலையில், சமீபத்தில் அந்த நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்வதற்காக, அவற்றைப் பிடிக்கச் சென்றுள்ளார்கள் சிலர்.
அப்போது, அங்கிருந்த சில நாய்கள் நீல நிறத்தில் மாறியுள்ளதை அவர்களும் கண்டுள்ளனர்.
அங்குள்ள மக்கள் அந்த நாய்கள் எதனால் அப்படி நிறம் மாறியுள்ளன என கேட்பதாகவும், ஆனால், தங்களுக்கும் அதற்கான காரணம் தெரியவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
Blue #dogs were spotted near the #Chernobyl #nuclear power plant by a rescue group recently. They were descendants of pets abandoned after the 1986 disaster. Tests are underway to find out what caused the unusual color. #animals #Ukraine pic.twitter.com/pxPNc87KdP
— Shanghai Daily (@shanghaidaily) October 28, 2025
அவற்றைப் பிடிக்கும் முயற்சியில் தாங்கள் ஈடுபட்டுள்ளதாகவும், அவற்றைப் பிடிக்க முடிந்தால் மட்டுமே அவை எதனால் திடீரென நிறம் மாறியுள்ளன என்பதைக் கண்டுபிடிக்கமுடியும் என்றும் கூறியுள்ளார் தொண்டு நிறுவன செய்தித்தொடர்பாளர் ஒருவர்.
கடந்த வாரம் வரை அந்த நாய்கள் சாதாரணமாக இருந்த நிலையில், அவை இப்படி திடீரென நிறம் மாற ஏதாவது ரசாயனம் காரணமாக இருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |