பொம்மைக்குள் புகுந்த ஆவி! தலைமுடி வளரும் அதிசயம்- 100 ஆண்டுகளாக தொடரும் மர்மம்
ஜப்பான் நாட்டில் உள்ள ஒரு பொம்மைக்கு 100 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமுடி வளர்ந்து கொண்டே இருக்கிறதாம், அந்த பொம்மைக்குள் ஒரு சிறுமியின் ஆன்மா இருப்பதாக அனைவரும் நம்புகின்றார்கள்.
எதனால் இந்த தலைமுடி வளருகிறது என்ற சந்தேகத்தை தீர்க்க அந்த முடியை வெட்டி ஆராய்ச்சிக்கு அனுப்பியுள்ளார்கள்.
ஆராய்ச்சியாளார்கள் கூறிய தகவல் பேரிடியாக மாறிவிட்டது, அந்த பொம்மைக்குள் அப்படி என்னதான் இருந்தது, அந்த பொம்மைக்கும் சிறுமிக்கும் இடையில் என்ன தொடர்பு என பார்க்கலாம்.
பரிசாக கிடைத்த பேய்
1918 ஜப்பானை சேந்த எழுச்சி சுசூகி என்ற 18 வயது இளைஞன், தனது 3 வயது தங்கை ஒஹிக்கு ஒரு அழகிய பொம்மையை வாங்கி கொடுத்திருக்கிறார்.
அவரின் தங்கை மிகவும் சந்தோசமாக அந்த பொம்மையினை வாங்கி வைத்துள்ளார்.
அந்த பொம்மை மிகவும் க்யூடாகவும் பாரம்பரிய சிகை அலங்காரம் மற்றும் ஆடையும் அணிந்து வித்தியாசமாகவும் காட்சியளித்தது.
நாம் எல்லாரும் சிறு வயதில் ஒரு அழகிய பொம்மை பரிசாக கிடைத்தால் எப்படி எல்லாம் பராமரித்து விளையாடுவோமோ அதே போல் சிறுமி ஒஹியும் விளையாடியுள்ளார்.
பரிதாபமாய் உயிரிழந்த சிறுமி!
பின்பு அவரின் உடல் நலம் திடீரென குன்றியிருக்கிறது. பின் பரிதாபமாக அந்த குழந்தை இறந்தும் போய்விட்டது.
அந்த குழந்தை இறந்தபின் அவளது நினைவாக இதனை வைத்து அவளின் வீட்டார் வழிப்பட்டனர், அதற்கு ஒஹிக்கு என பெயரும் வைத்துள்ளனர்.
இதன்பின் அந்த பொம்மைக்கு முடி நீளமாக வளருவதனை அவளின் குடும்பத்தினர் அவதானித்துள்ளனர்.
அதன்பின் ஒஹிதான் பொம்மைக்குள் வாழ்ந்துக்கொண்டிருக்கிறாள் என முழுதாக நம்பி அதனை ஆய்வுக்கும் அனுப்பியுள்ளனர். ஆராய்ச்சியாளர்கள் அப்போது தான் ஒரு உண்மையை கூறினார்கள்.
ஆம், இது ஒரு உண்மையான மனிதனின் முடி என கூறினர். இப்போது வரைக்கும் அதற்கு முழங்கால் வரை முடி வளருவதாகவும் அதனை அவ்வப்போது வெட்டுவதாகவும், அந்த சிறுமியின் ஆன்மாதான் அதனுள்ளே இருக்கிறது எனவும் அப்பகுதியிலுள்ள மக்கள் நம்புகின்றனர்.
அதனை அறிவியலாளர்கள் கண்டுப்பிடிக்க மேற்கொண்ட முயற்சி அனைத்தும் பாழாகியே போனது எனவும் கூறுகின்றனர்.