ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனைக்கு இனி வாழ்நாள் முழுவதும் இலவசம்! என்ன தெரியுமா? அறிவித்த நிறுவனம்
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று அசத்திய இந்திய வீராங்கனை மீரா பாய் சானுவுக்கு இனி வாழ்நாள் முழுவதும் பீட்சா இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
32ஆவது ஒலிம்பிக் தொடர், ஜப்பன் தலைநகர் டோக்கியோவில் துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பாக 127 வீரர்கள் 18 வகையான போட்டிகளில் கலந்துகொண்டுள்ளனர். பளு தூக்குதல் 49 கிலோ பிரிவில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு இறுதிச் சுற்றுவரை முன்னேறியிருந்தார்.
இதிலும் சிறப்பாகச் செயல்பட்ட மீராபாய், ஸ்நாட்ச் பிரிவில் 87 கிலோவும், ஜெர்க் முறையில் 115 கிலோவும் தூக்கி, வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார்.
2010ஆம் ஆண்டிற்குப் பிறகு பளு தூக்கும் போட்டியில் இந்தியாவுக்கு ஒலிம்பிக் பதக்கம் கிடைப்பது இதுதான் முதல்முறை.
@Mirabai_chanu Congratulations on bringing the medal home! ???You brought the dreams of a billion+ Indians to life and we couldn’t be happier to treat you to FREE Domino’s pizza for life ??
— dominos_india (@dominos_india) July 24, 2021
Congratulations again!! #DominosPizza #PizzasForLife #Tokyo2020 #MirabaiChanu https://t.co/Gf5TLlYdBi
இதையடுத்து வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய்க்கு பாராட்டு மழை குவிந்த வண்ணம் இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின் என அரசியல் தலைவர்கள் முதல், சாமானிய மக்கள் வரை பலர் அவரை பாராட்டி வருகிறார்கள்.
வெற்றிக்கு பிறகு பேசிய மீராபாய்,இந்த வெற்றிக்குப் பிறகு நான் முதலில் பீட்சா சாப்பிட விரும்புகிறேன் எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பிரபல பீட்சா உணவு நிறுவனமான டோமினோஸ் மீராபாய்க்கு வாழ்நாள் முழுவதும் இலவசமாக பீட்சா வழங்குவதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து டோமினோஸ் சமூகவலைதளத்தில், பதக்கத்தை வென்று வந்த மீராபாய் சானுவுக்கு வாழ்த்துக்கள்.
டோமினோஸ் பீட்ஸாவை வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு இலவசமாக தருவதற்கு மகிழ்ச்சியடைகிறோம், மீண்டும் வாழ்த்துக்கள் எனத் தெரிவித்துள்ளது.