நாளை என் பிறந்தநாளில் இதை செய்ய வேண்டாம்.., அமைச்சர் உதயநிதி கோரிக்கை
நாளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 47-வது பிறந்த நாள் கொண்டாடப்படவுள்ள நிலையில் அவர் சில வேண்டுகோள்கள் விடுத்துள்ளார்.
உதயநிதி கோரிக்கை
நவம்பர் 27-ம் திகதி தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு 'உதயநிதி உதயநாள் விழா' என்ற பெயரில் ஒரு மாத காலம் கொண்டாட சென்னை தெற்கு மாவட்ட செயலாளரும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருமான மா.சுப்பிரமணியன் ஏற்பாடு செய்துள்ளார்.
இந்நிலையில் உதயநிதி, "தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு ஃபிளெக்ஸ் பேனர் வைப்பதையும், பட்டாசுகள் வெடிப்பதையும் கழகத் தோழர்கள் தவிர்க்க வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் இது தொடர்பாக தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "என் பிறந்தநாளை முன்னிட்டு, கழகத் தோழர்கள் தமிழ்நாடு முழுவதும் மக்களுக்கு பயனுள்ள வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறீர்கள்.
இந்தப் பேரன்பு தொடர்ந்து செயல்படுவதற்கான உற்சாகத்தை, ஊக்கத்தை எனக்குத் தருகிறது.
என் பிறந்தநாளை முன்னிட்டு, கழகத் தோழர்கள் தமிழ்நாடு முழுவதும் மக்களுக்கு பயனுள்ள வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறீர்கள். இந்தப் பேரன்பு தொடர்ந்து செயல்படுவதற்கான உற்சாகத்தை, ஊக்கத்தை எனக்குத் தருகிறது .
— Udhay (@Udhaystalin) November 25, 2024
உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் அன்பையும் தெரிவிக்கும்… pic.twitter.com/cjxr8o8num
உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் அன்பையும் தெரிவிக்கும் இவ்வேளையில், என்னுடைய இந்தப் பிறந்தநாள் வேண்டுகோளையும் நினைவில்கொள்ளுமாறு, உங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |