2 பூஜ்ஜியத்தால் டெய்லருக்கு வந்த பிரச்சனை.., ரூ.86 லட்சத்திற்கு மின்கட்டணம்
டெய்லர் கடை உரிமையாளருக்கு வந்த மின்கட்டணம் லட்சங்களை தாண்டியதால் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
மின்கட்டணத்தால் அதிர்ச்சி
இந்திய மாநிலமான குஜராத், வல்சாத் பகுதியைச் சேர்ந்தவர் முஸ்லீம் அன்சாரி. இவர், அப்பகுதியில் பெண்கள் மற்றும் ஆண்களுக்கான ஆடை தைக்கும் கடையை நடத்தி வருகிறார்.
இவருக்கு வழக்கமாக ரூ.2000க்கும் மேல் தான் மின்கட்டணம் வரும். அதனை அவர் UPI மூலம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில், இந்த மாதம் இவருக்கு வந்துள்ள மின்கட்டணத்தை பார்த்து டெய்லர் கடை உரிமையாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
அதாவது, ரூ.86 லட்சம் மின்கட்டணம் செலுத்த வேண்டும் என்று வந்துள்ளது. இவரது மொத்த சொத்து மதிப்பை விட இந்த தொகை அதிகமாக இருந்துள்ளது.
இதையடுத்து, மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அதன்படி, அதிகாரிகள் கடைக்கு வந்து மீட்டரை மீண்டும் சரிபார்த்துள்ளனர்.
அப்போது தான், மீட்டரை ரீடிங் எடுத்தவர் கூடுதலாக இரண்டு பூஜ்ஜியங்கள் அதிகமாக பதிவிட்டதால் இந்த தொகை வந்தது தெரியவந்தது.
பின்னர், மீண்டும் ரீடிங் எடுத்து பார்த்ததில் அவர் ரூ.1,540 மட்டுமே மின் கட்டணமாக செலுத்த வேண்டும் என்று தெரிந்தது. இச்சம்பவத்தால் டெய்லர் கடை உரிமையாளர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |