விஜயகாந்தை இப்படியெல்லாம் கஷ்டப்படுத்தாதீங்க.. Please: இயக்குநர் பாண்டிராஜ் வேதனை
நடிகர் விஜயகாந்திற்கு தற்போது ஓய்வு தேவை, அவரை கஷ்டப்படுத்தாதீர்கள் என்று இயக்குநர் பாண்டிராஜ் வேதனை தெரிவித்துள்ளார்.
வீல் சேரில் வந்த விஜயகாந்த்
நடிகர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று முடிந்த நிலையில் குணமாகி வீடு திரும்பினார்.
இந்நிலையில், இன்று நடைபெறும் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் விஜயகாந்த் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டது. இதனால், விஜயாகாந்தை பார்க்க வேண்டும் என்று தேமுதிக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள், விஜயகாந்த் ரசிகர்கள் திரண்டனர்.
பின்னர், செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த விஜயகாந்தை அவரது உதவியாளர்கள் வீல் சேரில் அழைத்து வந்தனர். அப்போது, அவரது ரசிகர்களும், தொண்டர்களும் கோஷமிட்டனர். சிலர் விஜயகாந்தை பார்த்து கண்ணீர் சிந்தினர்.
இயக்குநர் பாண்டிராஜ் பதிவு
இந்நிலையில் இயக்குநர் பாண்டிராஜ் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "கேப்டன் விஜய்காந்திற்கு இப்போது சரியான ஓய்வு தேவை. அவர் பூரண குணமடையும் வரை அவரை இப்படியெல்லாம் கஷ்டப்படுத்தாதீர்கள்
ப்ளீஸ். பிடித்த ஒரு 'நல்ல மனிதரை' இப்படி பார்க்க ரொம்பவே கஷ்டமாக இருக்கிறது" என்று வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |