வாசனை திரவியங்கள் விற்பனையில் களமிறங்கிய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்! வைரல் புகைப்படம்
அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை வணிக பொருட்களை விற்பனை செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார்.
வணிக விற்பனையில் களமிறங்கிய டிரம்ப்
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் வாசனை திரவியங்கள்(perfume), கொலோன்(cologne) மற்றும் டிரம்ப்-பிராண்டட் வாட்சுகள் ஆகியவற்றை விற்பனை செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார்.
Trump has launched a new fragrance line named “Fight Fight Fight” available for $199 pic.twitter.com/XuNQy6zxJ2
— BoredApe6328.eth 🍌 (@DaybedNFT) December 7, 2024
“Fight, Fight, Fight,” என்ற “முழக்கத்துடன் விற்பனைக்கு வந்துள்ள கொலோன்(cologne) மற்றும் வாசனை திரவியங்கள்(perfume) ட்ரம்ப் பிராக்சன்ஸ்(Trump Fragrances) என்ற இணையதளம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த வாசனை திரவியங்கள் ஒவ்வொன்றும் சுமார் $199 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யப்படுகிறது.
டிரம்ப் அறிவிப்புக்கு இணையத்தில் பதிலளித்து இருந்த ஒருவர் “இந்த அறிவிப்பு என்னை சிரிக்க வைக்கிறது” என தெரிவித்துள்ளார்.
டிரம்ப் வாட்ச்
அதே நேரத்தில் “டிரம்ப் வாட்ச்கள்”(Trump Watches) என்ற பெயரில் புதிய மாடல் வாட்ச்களையும் அறிமுகப்படுத்தியுள்ளார்.
இவை சுமார் $499 முதல் $5,300 அமெரிக்க டொலர்கள் என்ற விலையில் பல மாடல்களுடன் விற்பனைக்கு சந்தைப்படுத்தப்பட்டுள்ளது.
BREAKING: The entire Morning Joe panel MOCKS Trump for selling $100,000 “Trump watches” to his supporters. This latest business venture is the weirdest one yet. Retweet so all Americans know the Trump campaign is just a giant scam. pic.twitter.com/PxPxIvlaQ9
— Trump’s Lies (Commentary) (@MAGALieTracker) September 27, 2024
இவற்றுடன் டிரம்ப்-பிராண்டட் பைபிள்கள், டிரம்ப் ஸ்னீக்கர்கள் ஆகியவற்றையும் டிரம்ப் விற்பனை செய்ய அறிமுகப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |