சூடுபிடித்துள்ள ஜனாதிபதி தேர்தல் களம்., முக்கிய நிகழ்வை அறிவித்துள்ள டிரம்ப்.!
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் அரசியல் சூடுபிடித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இருந்து தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் விலகியதையடுத்து, துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸ் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக நிற்கிறார்.
குடியரசுக் கட்சியின் வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார்.
டிரம்ப் வெற்றி பெறுவது உறுதி என்று சமீப காலம் வரை பல சர்வே முடிவுகள் தெரிவித்தன.
ஆனால், கமலா ஹாரிஸ் போட்டியிடுவதால், அதன்பிறகு வந்த சர்வே முடிவுகள் வித்தியாசமாக உள்ளன. இதனால், ஜனாதிபதி தேர்தல் சூடுபிடித்துள்ளது.
இதற்கிடையில், வரும் வாரத்தில் ஒரு சுவாரசியமான நிகழ்ச்சி நடக்கவுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்பை, புகழ்பெற்ற தொழிலதிபரும், உலகில் பெரும் பணக்காரரான லோன் மஸ்க் (Elon Musk) பேட்டி எடுக்கவுள்ளார்.
இதை டிரம்ப் தானே வெளிப்படுத்தினார். திங்கட்கிழமை இரவு எலோன் மஸ்க்கிற்கு பேட்டியளிப்பதாக அவர் கூறினார். மேலும் விவரங்கள் விரைவில் வெளியாகும் என்றார்.
எலோன் மஸ்க் டிரம்பிற்கு ஆதரவாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Donald Trump announces interview with Elon Musk, Donald Trump Elon Musk meeting