மலேசிய விமான நிலையத்தில் நடனமாடிய டிரம்ப்: இணையத்தில் வைரலாகும் வீடியோ
மலேசியாவில் தரையிறங்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.
5 நாள் இராஜதந்திர சுற்றுப்பயணம்
ஆசிய பிராந்தியத்தில் அமெரிக்காவின் செல்வாக்கை வலுப்படுத்தும் நோக்கில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 5 நாள் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
TRUMP DANCE — MALAYSIA EDITION! 🔥🔥🔥 pic.twitter.com/HLyCVaCndh
— Rapid Response 47 (@RapidResponse47) October 26, 2025
இந்த 5 நாள் சுற்றுப்பயணத்தின் போது ஜப்பான், தென் கொரியா, மலேசியா ஆகிய முக்கிய ஆசிய நாடுகளின் தலைவர்களை சந்தித்து டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
இந்த சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையம் வந்து இறங்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.
நடனமாடிய டொனால்ட் டிரம்ப்
இது தொடர்பாக Rapid Response 47-னின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியான வீடியோ ஒன்றில், வரவேற்பு மேலதாளங்களின் இசைக்கு ஏற்ப விமான ஓடுதளப் பாதையில் டிரம்ப் நடனமாடியது பதிவாகியுள்ளது.

மலாய், சீன, இந்திய மற்றும் போர்னியோ பழங்குடி மக்கள் என மலேசியாவின் முக்கிய இனக் குழுக்களை பிரதிபலிக்கும் விதமாக வண்ணமயமான ஆடைகளை அணிந்திருந்த கலைஞர்களுடன் ஜனாதிபதி டிரம்ப் நடனமாடியது அங்கிருந்தவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
இந்த மகிழ்ச்சியான தருணத்தின் போது மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் உடன் இருந்தது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |