ஜோ பைடன் எப்படி மேடையில் வழி தெரியாமல் தள்ளாடுவார்., நடித்துக் காட்டிய டொனால்ட் டிரம்ப்
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் அடிக்கடி சில சர்ச்சைகளால் செய்திகளில் இருப்பவர். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட டிரம்ப் தயாராகி வருகிறார். இருப்பினும், டிரம்ப் தற்போது சட்டரீதியான சர்ச்சைகளை எதிர்கொண்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அடிக்கடி தனது உரைக்குப் பிறகு, மேடையில் இருந்து கீழே இறங்க தள்ளாடுவது தெரிந்ததே. சமீபத்தில், அதனை கேலி செய்யும் விதமாக டிரம்ப் நடித்து காட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நேற்று (திங்கட்கிழமை) நியூ ஹாம்ப்ஷயரின் டெர்ரியில் நடந்த நிகழ்ச்சியில் டொனால்ட் டிரம்ப் பங்கேற்று உரை நிகழ்த்தினார். இந்தச் சந்தர்ப்பத்தில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மேடையில் பேசிய பிறகு எப்படி இறங்குவார் என்பதை டிரம்ப் நடித்து காட்டினார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் வேடிக்கையான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
How good was my impression of Joe Biden trying to walk off the stage after making a speech?
— Donald J. Trump (Parody) (@realDonParody) October 23, 2023
Derry, NH. New Hampshire
pic.twitter.com/O7caVI9j0y
இதுவே இரு தினங்களுக்கு முன் டிரம்பின் தனிப்பட்ட விஷயம் தொடர்பான ஆடியோ வெளியானது தெரிந்ததே. அவுஸ்திரேலிய கோடீஸ்வரரான அந்தோனி பிராட் வெளியிட்ட இந்த ஆடியோவில், டிரம்ப் தனது மனைவி மெலனியாவை பிகினி உடையில், புளோரிடாவில் உள்ள தனது மார் எ லாகோ இல்லத்தைச் சுற்றி வந்தால், தனது கோடீஸ்வர நண்பர்கள் பொறாமை படட்டும் என்று கூறியதாக தெரிவிக்கிறது.
2020 தேர்தலின் போது டிரம்ப் அந்தோனி பிராட்டுடன் அறிமுகபமானார். அவர்களின் அறிமுகம் நட்பாக மாறியது. இந்த ஆடியோ விவகாரத்தை டிரம்பின் செய்தி தொடர்பாளர் மறுத்துள்ளார். இது வெறும் கற்பனை என்று கூறியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Donald Trump Imitaes Joe Biden, US presidential election 2024, Trump mimics Biden, Trump mocks Joe Biden's stage mishaps