சூடுபிடிக்கும் அமெரிக்க தேர்தல்: 3 நேரடி விவாதங்களுக்கு தயார்! டொனால்ட் டிரம்ப் அழைப்பு
பிரித்தானிய இளைஞரை காணவில்லை! பொதுமக்களின் உதவியை நாடியுள்ள குடும்பத்தினர் கமலா ஹாரிஸுடன் 3 விவாதங்களுக்கு தயாராக இருப்பதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
விவாதங்களுக்கு தயார்
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியும், தற்போதைய ஜனாதிபதி வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் முன்னணி ஒளிபரப்பு நிறுவனங்களில் 3 விவாத நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அதன்படி, செப்டம்பர் மாதம் 4ம் திகதி Fox News-ல் முதல் விவாதத்திற்கும், செப்டம்பர் 10ம் திகதி NBC, செப்டம்பர் 25ம் திகதி, இரண்டாவது மற்றும் மூன்றாவது விவாதங்களுக்கு தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இதற்கு ஒளிபரப்பு நிறுவனங்களின் முதலாளிகள் சம்மதம் தெரிவித்து இருப்பதாகவும், இருப்பினும் நாங்கள் அதை உறுதிப்படுத்தவில்லை என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன் கமலா ஹாரிஸின் பிரச்சார கூட்டமைப்பின் சம்மதம் மற்றும் தயார் நிலை குறித்து அறிய டிரம்ப் காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மூன்று விவாதங்களும் எங்கு நடைபெறும், பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்களா என்பது குறித்து விவரங்களை டிரம்ப் வழங்கவில்லை.
ஹாரிஸ் பிரச்சார அமைப்பின் முன்னுரிமை
ஹாரிஸ் பிரச்சார அமைப்பு செப்டம்பர் 10ம் திகதி ABC News ஒளிபரப்பு நிறுவனத்துடனான விவாத நிகழ்ச்சிக்கு முன்னுரிமை வழங்க முயற்சித்து வருகிறது.
இந்த விவாத நிகழ்வானது டிரம்ப் மற்றும் ஜோ பைடன் இடையில் நிர்ணயிக்கப்பட்ட விவாத திட்டமிடல் ஆகும், ஆனால் ஜோ பைடன் தேர்தலில் இருந்து விலகியதை தொடர்ந்து இந்த விவாத நிகழ்ச்சி திட்டம் கலைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, டிரம்ப் மற்றும் கமலா இருவரும் செப்டம்பர் 10ம் திகதி ABC News ஒளிபரப்பு நிறுவனத்தின் விவாத நிகழ்ச்சியில் பங்கேற்க சம்மத்ம் தெரிவித்து இருப்பதாக தெரியவந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |