ஆபாச பட நடிகை விவகாரம்... டொனால்டு ட்ரம்ப் தொடர்பில் வெளிவரும் புதிய தகவல்
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் மீது சுமத்தப்பட்ட 34 குற்றவியல் வழக்குகளில் அவர் குற்றமற்றவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டொனால்டு ட்ரம்ப் முறைப்படி கைது
ஆபாச பட நடிகை ஒருவருக்கு 130,000 டொலர் தொகை அளித்த விவகாரம் தொடர்பில் விசாரணை முன்னெடுத்த அதிகாரிகள், அவரது தொழில் தொடர்பான முறைகேடுகள் குறித்து வழக்குப் பதிந்தனர்.
@reuters
இந்த நிலையில் இன்று லோயர் மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் முறைப்படி கைதுசெய்யப்பட்டார். அமெரிக்க வரலாற்றில் கிரிமினல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு நீதிமன்றத்தில் ஆஜரான முதல் தற்போதைய அல்லது முன்னாள் ஜனாதிபதி என்ற பெருமையை டொனால்டு ட்ரம்ப் பெற்றுள்ளார்.
அவர் மீதான 34 குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டால், மொத்தமாக 136 ஆண்டுகள்: சிறை தண்டனை விதிக்கப்படலாம். தம் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் அரசியல் நோக்கம் கொண்டது என குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், அனைத்தும் உண்மைக்கு புறம்பானது என்றார்.
நீதிமன்றத்தில் அவரது புகைப்படம் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ட்ரம்ப் இனி வார்த்தைகளை கவனமுடன் பயன்படுத்த வேண்டும் என நீதிபதி கடிந்துகொண்டுள்ளார். முன்னதாக, அவரை பாரபட்சம் கொண்டவர் எனவும் சார்புடையவர் என்றும் ட்ரம்ப் குற்றம் சாட்டியிருந்தார்.
@reuters
இரு பெண்களுடன் ரகசிய உறவு
ட்ரம்ப் மீதான குற்றச்சாட்டுகளில் தொடர்புடைய இரு பெண்களும், அவர் அரசியலில் களம் காணும் முன்னரே ரகசிய உறவில் இருந்துள்ளனர். ஆனால் புகார் அளித்துள்ள ஒரு பெண்ணுடன் தமக்கு எந்த தொடர்பும் இல்லை என ட்ரம்ப் மறுப்பு தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப் மீதான குற்றச்சாட்டுகளும் கைது நடவடிக்கையும் கண்டிப்பாக அவரது அரசியல் எதிர்காலத்தை பாதிக்காது என்றே கூறுகின்றனர். 2006ல் ஸ்டோர்மி டேனியல்ஸ் என்ற ஆபாச பட நடிகை Lake Tahoe பகுதியில் வைத்து ட்ரம்புடன் நெருக்கமாக இருந்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.
@getty
மேலும், குறித்த நடிகைக்கு 130,000 டொலர் தொகையை கையூட்டாக வழங்கியதையும் முன்னர் ட்ரம்ப் ஒப்புக்கொண்டுள்ளார்.
2017 முதல் 2021 வரையில் அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பில் இருந்த ட்ரம்ப் 2024ல் மீண்டும் தேர்தலில் களமிறங்க இருக்கிறார்.