டொனால்டு டிரம்பின் பாம் பீச் ரிசார்ட் வளாகம் மூடல்: வெளியான பின்னணி
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் Mar-A-Lago பாம் பீச் ரிசார்ட் வளாகம் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உறுப்பினர்கள் அனைவருக்கும் குறித்த தகவலை ரிசார்ட் நிர்வாகம் தொலைபேசி மூலம் அறிவித்துள்ளது. மேலும், இது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், ரிசார்ட் நிர்வாகமே அதை உறுதி செய்துள்ளது.
அடுத்த அறிவிப்பு வரும் வரையில், Mar-A-Lago பாம் பீச் ரிசார்ட் வளாகத்தின் ஒருபகுதி மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, அந்த வளாகத்தில் தற்போதைய சூழல் தொடர்பில் விவாதிப்பது பொருத்தமாக இருக்காது என அப்பகுதி மக்களில் சிலர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும், Mar-A-Lago பாம் பீச் ரிசார்ட் வளாகத்தின் எந்த பகுதி மூடப்பட்டுள்ளது என்பது தொடர்பிலும், உறுதியான தகவலை வெளியிட நிர்வாகம் மறுத்துள்ளது.
ஜனாதிபதியாக பொறுப்புகளை துறந்த பின்னர், டொனால்டு டிரம்ப் நேரடியாக இந்த வளாகத்திற்கே சென்றார்.
ஒரு வார காலம் இங்கே தங்கியிருந்த அவர், கோல்ஃப் விளையாட்டில் பொழுதை போக்கினார்.
பின்னர் நண்பர்களுடன் உணவருந்தி மகிழ்ந்த அவர், தமது கட்சி சகாக்கள் பலரையும் இங்கு வரவழைத்து அரசியலில் அடுத்த நகர்வு குறித்து விவாதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
