எங்களைப்போல் யாரும் ஆயுதங்களை உருவாக்க முடியாது! அவ்வாறு செய்தால் அவர்களை..ட்ரம்ப் பகிரங்கம்
ஜப்பானில் பேசிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தாங்கள் தயாரிப்பது போல் வெடிமருந்துகள், ஆயுதங்களை யாரும் தயாரிப்பதில்லை என்று பகிரங்கமாக கூறினார்.
மாலுமிகளிடம் பேசிய ட்ரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) ஜப்பானில் புதிய பிரதமர் சனே தகைச்சியுடன் விமானம் தாங்கிக் கப்பலில் உரையாடினார். 
அப்போது அவர் மாலுமிகளிடம் அவர்கள் பார்ப்பதற்ககு மிகவும் அழகாக இருப்பதாக கூறினார். மேலும் அவர்களிடம் பேசிய ட்ரம்ப்,
"நாங்கள் செய்வதுபோல் யாரும் உபகரணங்களை உருவாக்குவதை நீங்கள் காண்கிறீர்கள். வெடிமருந்துகள், ஆயுதங்கள், ஏவுகணைகள், விமானங்கள் என எதையும் யாரும் தயாரிப்பதில்லை.
அவர்கள் அவ்வாறு செய்தால், அமெரிக்க மாலுமிகள் அவர்களை நசுக்கி, மூழ்கடித்து, அவர்களை நொறுக்க தயாராக இருக்கிறார்கள், இல்லையா?" என்றார். 
கடற்படையின் இறுதி வலிமை உபகரணங்களில் இருந்து வரவில்லை என்று கூறிய ட்ரம்ப், முழு இராணுவத்திற்கும் ஒட்டுமொத்த ஊதிய உயர்வை ஆதரிப்பதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் நேர்மையாக சொல்லப் போனால் ஜோ பைடன் ஒரு பெரிய ஜனாதிபதி அல்ல; தன்னை ஒரு விமானி என்று சொல்லிக் கொள்ளும் அவர் ஒரு லொறி ஓட்டுநர் என்று விமர்சித்தார். 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |