இந்தியா-பாகிஸ்தான் அணு ஆயுதப்போரை தடுத்து நிறுத்தினேன்: ஆனால் புடின்..ஜனாதிபதி ட்ரம்ப்
அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே அணு ஆயுதப் போரை தடுத்து நிறுத்தியதாக தெரிவித்தார்.
மீண்டும் ஒருமுறை
டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) பல முறை இந்தியா, பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக கூறியுள்ளார். 
இந்த நிலையில் மீண்டும் ஒருமுறை அவர் அதனை வெள்ளை மாளிகையில் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய ட்ரம்ப், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே 8 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. அதில் 26 பேர் உயிரிழந்தனர் என்றார்.
பெரும் பகை
மேலும் அவர், "ஜனாதிபதி புடின் மற்றும் ஜெலென்ஸ்கி ஆகியோருக்கு இடையே பெரும் பகை உள்ளது. நான் 8 போர்களைத் தீர்த்து வைத்திருக்கிறேன். தாய்லாந்து, கம்போடியாவுடன் நல்லுறவை ஏற்படுத்தி வருகிறது.
ஆனால், அது ஏற்கனவே நல்ல நிலையில் இருப்பதாக நான் நினைக்கிறேன். பாகிஸ்தானுக்கும், இந்தியாவிற்கும் இடையே ஏற்படவிருந்த ஒரு அணு ஆயுதப் போரை நாங்கள் தடுத்தோம்.
பாகிஸ்தான் பிரதமர், ஜனாதிபதி ட்ரம்ப் 10 மில்லியன் உயிர்களைக் காப்பாற்றினார்; ஒருவேளை அதற்கும் மேல் என்று கூறினார்.
அந்தப் போர் தீவிரமடையத் தொடங்கியிருந்தது. நான் இன்னும் தீர்க்காத ஒரே போர் ரஷ்யா-உக்ரைன் போர் மட்டும்தான்" என்றார். 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |