இறுதியாக டிரம்ப் எடுத்த நல்ல முடிவு! 14 மில்லியன் அமெரிக்கர்களுக்கு கிடைக்கவுள்ள சலுகை
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கொரோனா வைரஸ் நிவாரணம் மற்றும் செலவு தொகுப்பு மசோதாவில் கையெழுத்திட்டுள்ளார்.
மக்களுக்கு பெரிய தொகையை வழங்க விரும்புவதாகக் கூறி, டிரம்ப் ஆரம்பத்தில் மசோதாவில் கையெழுத்திட மறுத்துவிட்டார்.
இந்த தாமதத்தால், மில்லியன் கணக்கான அமெரிக்கர்கள் தற்காலிகமாக வேலையின்மை சலுகைகளை இழந்தனர்.
900 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள இந்த நிவாரணத் தொகுப்பை பல மாத பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு காங்கிரஸால் அங்கீகரித்தது.
டிரம்ப் திங்கட்கிழமை நள்ளிரவுக்குள் இந்த மசோதாவில் கையெழுத்திடாமல் இருந்திருந்தால், சட்டமன்ற உறுப்பினர்கள் ஸ்டாப் கேப் மசோதாவை நிறைவேற்றபடாமலே, பகுதி அரசாங்க பணிநிறுத்தம் தொடங்கியிருக்கும். இதனால் 14 மில்லியன் அமெரிக்கர்கள் வேலையின்மை சலுகைகள் கிடைக்காமல் அவதிக்கு உள்ளாகியிருப்பர்.
புளோரிடாவில் இருக்கும் அதிபர் டிரம்ப் இறுதியாக இந்த மசோதாவை சட்டமாக கையெழுத்திட ஏன் முடிவு செய்தார் என்பது தெரியவில்லை. ஆனால், அவர் காங்கிரசின் இரு தரப்பிலிருந்தும் வளர்ந்து வரும் அழுத்தங்களுக்கு உள்ளாகியிருந்தார்.
நவம்பர் தேர்தலில் ஜோ பைடனிடம் தோல்வியடைந்த டிரம்ப், ஜனவரி 20 அன்று பதவியை விட்டு விளக்குகிறார். இருப்பினும் அவர் தோல்வியை ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டார்.