பாகிஸ்தானில் பாட்டு பாடி குல்ஃபி விற்கும் டொனால்ட் டிரம்ப்! வைரலாகும் வீடியோ
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை போன்ற ஒரு நபர் பாகிஸ்தானில் குல்ஃபி விற்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
குல்ஃபி விற்கும் டொனால்ட் டிரம்ப்
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை போன்ற ஒரு நபர் பாகிஸ்தானில் உள்ள தெருவில் குல்ஃபி விற்பனையில் ஈடுபட்டுள்ளார்.
இவர், பாகிஸ்தான் மாகாணங்களில் ஒன்றான பஞ்சாபின் சாஹிவால் மாவட்டத்தைச் சேர்ந்தவர். உள்ளூர் மக்கள் இவரை 'சாச்சா பக்கா' என்று அழைப்பதாக கூறப்படுகிறது.
இவர் ஒரு பயிற்சி பெற்ற இசைக் கலைஞரைப் போல அவரது மயக்கும் குரலில் பாடி குல்ஃபி ஐஸ்க்ரீமை விற்பனை செய்கிறார். அவர், அந்த தெருவிற்கு வந்ததை மற்றவருக்கு தெரியப்படுத்த "ஏய் குல்ஃபி... குல்ஃபி.. ஆஆ... கோயா குல்பி, குல்பி, குல்பி," என்று பாடுகிறார்.
தற்போது இது தொடர்பான வீடியோ சமுக வலைதளங்களில் வெளியாகி நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
பழைய வீடியோ
டொனால்ட் டிரம்ப்பை போல இருக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த இந்த குல்ஃபி விற்பனையாளர் கடந்த 2021 -ம் ஆண்டு இணையத்தில் பரவலாக பேசப்பட்டது அனைவருக்கும் நினைவிருக்கும்.
Wah. Qulfi walay bhai, Kya baat ha کھاۓ بغیر مزا آ گیا pic.twitter.com/YJeimzhboJ
— Shehzad Roy (@ShehzadRoy) June 10, 2021
அப்போது இவர், அவரது ஐஸ்கிரீம் வண்டியில் பாடும் வீடியோ இணையத்தில் வெளியாகி, பார்ப்பதற்கு மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. இவரின் வீடியோவை பாகிஸ்தானிய பாடகர் ஷெஹ்சாத் ராய் கூட பகிர்ந்து பாராட்டினார் என்பது குறிப்பிடதக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |