6,000 புலம்பெயர்ந்தோரை இறந்தவர்களாக அறிவித்த ட்ரம்ப் நிர்வாகத்தின் அராஜகச் செயல்
புலம்பெயர்ந்தோர் விடயத்தில் தான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்பது போல நடந்துகொள்கிறார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்.
அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே என்னும் கொள்கை கொண்ட ட்ரம்ப், புலம்பெயர்ந்தோரை கடுமையாக கட்டுப்படுத்த, எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்லக்கூடும் என்பதை அவரது சமீபத்திய நகர்வு உறுதிசெய்துள்ளது!
6,000 புலம்பெயர்ந்தோர் இறந்தவர்களாக அறிவிப்பு ஆம், ட்ரம்ப் நிர்வாகம், அமெரிக்காவில் வாழும் 6,000க்கும் அதிகமான புலம்பெயர்ந்தோரை இறந்தவர்களாக அறிவித்துள்ளது.
இறந்தவர்களாக அறிவிக்கப்பட்ட புலம்பெயர்ந்தோரால் அமெரிக்காவில் வேலை செய்யவோ, அரசு உதவி பெறவோ முடியாது.
AFP via Getty Images
அத்துடன், சமூக பாதுகாப்பு எண் (Social Security number) இல்லாதவர்களால் வங்கிகளைப் பயன்படுத்துதல் போன்ற அடிப்படை சேவைகளைக் கூட பயன்படுத்த முடியாது.
ஆக, இப்படி ஒரு நெருக்கடியை ஏற்படுத்தினால், புலம்பெயர்ந்தோர் வேறு வழியில்லாமல் தாமாகவே அமெரிக்காவை விட்டு வெளியேறிவிடுவார்கள் என்பதற்காகவே ட்ரம்ப் நிர்வாகம் இப்படி ஒரு மோசமான நடவடிக்கையை எடுத்துள்ளது.