மார்க் ஜூக்கர்பெர்க்கை கேலி செய்த டிரம்ப்! வெள்ளை மாளிகை இரவு விருந்தில் சுவாரஸ்யம்!
மெட்டா தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க்கின் அரசியல் வாழ்க்கை குறித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறிய கருத்து கவனம் பெற்றுள்ளது.
டிரம்ப் - மார்க் ஜூக்கர்பெர்க் சந்திப்பு
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற இரவு விருந்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன் மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க் கலந்து கொண்டார்.
அப்போது செய்தியாளர்கள் Meta CEO மார்க் ஜூக்கர்பெர்க்கிடம், கருத்து சுதந்திரம் குறித்து கேள்வி எழுப்பினர்.
President Trump: "This is the beginning of your political career."
— Fox News (@FoxNews) September 5, 2025
Mark Zuckerberg: "No it's not."
President Trump jokes with Facebook founder and Meta CEO Mark Zuckerberg after a reporter asks the two about free speech concerns during a White House event with tech leaders. pic.twitter.com/ZUeYiTXAEs
அப்போது குறுக்கிட்ட டிரம்ப், வேடிக்கையாக மார்க்கை குறிப்பிட்டு “இது உங்கள் அரசியல் வாழ்க்கையின் தொடக்கம்” என கூறினார்.
இதற்கு உடனடியாக பதிலளித்த மார்க், “இல்லை, அது இல்லை, என்று புன்னகையுடன் பதிலளித்தார்.
மேலும், தான் செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளிக்க விரும்பவில்லை என்று ஜனாதிபதி டிரம்பிடம் மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்ததாகவும் CNN தகவல் தெரிவித்துள்ளது.
இந்த இரவு விருந்து சந்திப்பில் மார்க் ஜூக்கர்பெர்க் தவிர, ஆப்பிள் நிறுவனத்தின் டிம் குக், மைக்ரோசாப்ட் சத்யா நாதெல்லா, பில்கேட்ஸ், கூகுள் சுந்தர் பிச்சை மற்றும் ஓபன் ஏஐ-யின் சாம் ஆல்ட்மேன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்த சந்திப்பில் அமெரிக்க பொருளாதாரத்தை மேம்படுத்த கூடிய முக்கிய முதலீடுகள் குறித்து முக்கிய விவாதம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |