உங்கள் தவறுதான்... உக்ரைன் போர் தொடர்பில் ஜெலன்ஸ்கி மீது குற்றம் சாட்டியுள்ள ட்ரம்ப்
உக்ரைன் போர் தொடர்பில், உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கி மீது குற்றம் சாட்டியுள்ளார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்.
உங்கள் தவறுதான்...
2022ஆம் ஆண்டில், ரஷ்யாவுடன் உக்ரைன் ஒப்பந்தம் செய்துகொண்டிருந்தால், போரே துவங்கியிருக்காது என்று கூறியுள்ளார் ட்ரம்ப்.
அமைதி பேச்சுவார்த்தைகளுக்கு உக்ரைன் அழைக்கப்படவில்லை என்னும் விடயத்தை ஏற்றுக்கொள்ளாத ட்ரம்ப், இன்று வந்து எங்களை அழைக்கவில்லை என்கிறீர்கள்.
ADMIN POST.
— Tommy Robinson 🇬🇧 (@TRobinsonNewEra) February 18, 2025
Trump on European leaders moaning about not being involved in the peace deal.
"But today I heard, 'Oh, we weren't invited' Well, you've been there for three years, you should have ended it three years ago, you should have never started it, you could have made a… pic.twitter.com/PKDO5d223Y
மூன்று ஆண்டுகளாக நீங்கள் இருந்துகொண்டுதானே இருக்கிறீர்கள், நீங்கள் மூன்று வருடங்களுக்கு முன்பே போரை முடித்துக்கொண்டிருக்கவேண்டும், நீங்கள் போரை துவக்கியிருக்கவே கூடாது, நீங்கள் ஒரு ஒப்பந்தத்தை செய்துகொண்டிருக்கவேண்டும்.
ஆனால், உக்ரைன் அதைச் செய்யவில்லை, அப்படிச் செய்திருந்தால் இத்தனை உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்காது, இத்தனை நகரங்கள் நாசமாகியிருக்காது, ஆனால், அதை உக்ரைன் செய்யவில்லை என சரமாரியாக உக்ரைன் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார் ட்ரம்ப்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |