ரஷ்யாவிற்காக வேறு நாட்டில் நாசவேலையில் இறங்கிய உக்ரேனியர்கள்: பகிரங்கப்படுத்திய பிரதமர்
உக்ரேனியர்கள் இருவர் ரஷ்யாவுக்காக ரயில்வே நாசவேலையில் சந்தேகிக்கப்படுவதாக போலந்து பிரதமர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிற்காக நாசவேலை
போலந்தில் சனிக்கிழமைக்கும், திங்கட்கிழமைக்கும் இடையில் நடந்த நாசவேலை செயல்கள், உக்ரைனுக்கு பொருட்களை கொண்டு செல்லப் பயன்படுத்தப்படும் ரயில் பாதையை சேதப்படுத்தின.
இதனைக் குறிப்பிட்டு பேசிய அந்நாட்டின் பிரதமர் டொனால்ட் டஸ்க்(Donald Tusk), "உக்ரைனில் முழு அளவிலான போர் வெடித்ததில் இருந்து போலந்தில் மிகவும் கடுமையான தேசிய பாதுகாப்பு நிலைமை" என்று அழைத்தார்.
மேலும் பேசிய அவர், ரஷ்ய உளவுத்துறை அமைப்புகளின் சார்பாக செய்லபடும் இரண்டு உக்ரேனியர்கள் போலந்தில் தனித்தனி ரயில்வே நாசவேலை செயல்களை மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படுவதாகவும் கூறினார்.
வழக்குரைஞர்கள் மற்றும் புலனாய்வாளர்களின் தகவல்களை மேற்கோள் காட்டி, அவர்கள் இருவரும் நீண்ட காலமாக ரஷ்ய சேவைகளை இயக்கி ஒத்துழைத்து வருகின்றனர் என்று கூறிய டஸ்க், சந்தேக நபர்களின் அடையாளங்களை அதிகாரிகள் அறிந்திருக்கிறார்கள்; ஆனால் விசாரணை தொடரும் வரை அவர்களை விடுவிக்க மாட்டார்கள் என குறிப்பிட்டார். 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |