மனைவிக்கு சிறுநீரகம் தானம் செய்வதற்காக மருத்துவமனைக்கு சென்ற நபர்; பரிசோதனையில் தெரியவந்த அதிரவைக்கும் தகவல்
தன் மனைவிக்கு சிறுநீரக தானம் கொடுப்பதற்காக மருத்துவ பரிசோதனைக்குச் சென்றார் ஒருவர். ஆனால், மருத்துவப் பரிசோதனையின் முடிவுகள் எதிர்பாராத அதிர்ச்சியைக் கொடுத்துள்ளன.
சிறுநீரகம் செயலிழந்த மனைவி
திருமணமாகி ஆறு ஆண்டுகள் வாழ்ந்து, இரண்டு பிள்ளைகளையும் பெற்ற நிலையில், அந்த நபரின் மனைவி உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார்.
அவரது சிறுநீரகங்கள் செயலிழந்ததால், அவருக்கு மாற்று சிறுநீரகம் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. உறவினர்கள் யாருடைய சிறுநீரகமும் அவருக்கு பொருந்ததாதால், தன் சிறுநீரகம் பொருந்துமா என பரிசோதிக்கும்படி கூறியுள்ளார் அந்தக் கணவர்.
Credit: Getty
பரிசோதனை முடிவுகள் கொடுத்த எதிர்பாராத அதிர்ச்சி
பரிசோதனை முடிவுகளில் அந்த கணவருடைய சிறுநீரகம் மனைவிக்கு பொருந்துவதாக தெரியவந்துள்ளதாக தெரிவித்த மருத்துவர்கள், கூடவே இன்னொரு செய்தியையும் தெரிவித்தார்கள். அந்த செய்தி தம்பதியரை கடுமையாக பாதித்துள்ளது.
அதாவது, பொதுவாக உறவினர்களின் சிறுநீரகம் குறிப்பிட்ட அளவுக்கு பொருந்தலாம். ஆனால், கணவன் மனைவியுடைய சிறுநீரகங்கள் அந்த அளவுக்கு பொருந்தாது.
இந்த கணவன் மனைவியைப் பொருத்தவரை, மிக நன்றாக இரு சிறுநீரகங்களும் பொருந்தின.
Credit: Getty
அதில் என்ன பிரச்சினை?
அதாவது, அண்ணன் தங்கை, அக்கா தம்பி, போன்ற சகோதர உறவுகளில் மட்டுமே மிக அதிக அளவில் சிறுநீரகம் பொருந்தும்!
ஆக, திருமணமாகி ஆறு ஆண்டுகள் வாழ்ந்து, இரண்டு பிள்ளைகளையும் பெற்ற நிலையில், ஒருவேளை தாங்கள் இருவரும் அண்ணன் தங்கையாக இருக்கக்கூடுமோ என்ற சந்தேகம் தம்பதியருக்கு ஏற்பட்டுள்ளதால், அவர்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார்கள்.
அவர்கள் இந்த விடயத்தை சமூக ஊடகம் ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ள நிலையில், பலரும் அவர்களுக்கு ஆதரவாக தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்டுள்ளார்கள்.
உங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டது, குழந்தைகள் இருக்கிறார்கள், அதை மாற்றமுடியாது, ஆகவே, இனி இதைக்குறித்தெல்லாம் கவலைப்படவேண்டாம் என்கிறார் ஒருவர்.
மற்றொருவரும், இது ஒரு முக்கியமான விடயம்தான், ஆனாலும், இதில் எந்த அவமானமும் இல்லை, இது யாருடைய தவறும் இல்லை என்கிறார்.
இன்னொருவரும், உங்களுக்குத் திருமணம் ஆகி குழந்தைகளும் இருக்கிறார்கள். தொடர்ந்து மகிழ்ச்சியாக வாழுங்கள், உங்கள் பிள்ளைகளுக்கு தொடர்ந்து நல்ல பெற்றோராக இருங்கள் என்கிறார்.
Credit: Moment RF

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.