பிரித்தானிய வீரர்கள் இருவருக்கு மரண தண்டனை விதித்த ரஷ்ய நீதிபதி மீது கொலை முயற்சி: வெளிவரும் பின்னணி
பொலிசார், தாக்குதல்தாரிகளை தீவிரமாக தேடிவருவதாக ரஷ்ய பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது.
நாஜி குற்றவாளிகளை தண்டித்த நீதிபதி என Donetsk பிராந்தியத்தில் தலைவர் Denis Pushilin தெரிவித்திருந்தார்.
இரண்டு பிரித்தானிய வீரர்களுக்கு மரண தண்டனை விதித்த ரஷ்ய நீதிபதி, படுகொலை முயற்சியை அடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள Donetsk பிராந்தியத்தின் Vuhlehirsk பகுதியில் வைத்தே நீதிபதி Alexander Nikulin மீது துப்பாக்கிச் சூடு முன்னெடுக்கப்பட்டுள்ளது. பொலிசார், தாக்குதல்தாரிகளை தீவிரமாக தேடிவருவதாக ரஷ்ய பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது.
@EPA
நாஜி குற்றவாளிகளை தண்டித்த நீதிபதி இவர் என Donetsk பிராந்தியத்தில் விளாடிமிர் புடினால் நியமிக்கப்பட்ட தலைவர் Denis Pushilin தெரிவித்திருந்தார்.
விளாடிமிர் புட்டினின் உக்ரைன் மீதான விளாடிமிர் புடினின் காட்டுமிராண்டித்தனமான படையெடுப்பை நியாயப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக உக்ரேனிய மக்கள் மீது நாஜி முத்திரை அடிக்கடி குத்தப்படுகிறது.
@reuters
Donetsk பிராந்தியத்தின் உச்ச நீதிமன்ற நீதிபதி மீது தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ள சம்பவம் மன்னிக்கமுடியாத குற்றச்செயல் என Denis Pushilin தெரிவித்துள்ளார். மேலும், உக்ரைன் தொடர்ந்து பயங்கரவாத செயல்களில் துணிந்து ஈடுபட்டு வருகிறது எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைனில் போரிட்டு வந்தவர்கள் 28 வயதான Aiden Aslin மற்றும் 48 வயதான Shaun Pinner. இவர்கள் இருவரும் ரஷ்ய துருப்புகளிடம் சிக்க, கடந்த ஜூன் மாதம், வாடகை கொலையாளிகள் என குறிப்பிட்டு, இவர்கள் இருவருக்கும் மரண தண்டனை விதித்திருந்தார் நீதிபதி அலெக்சாண்டர் நிகுலின்.
இந்த நிலையில், சவுதி அரேபிய பட்டத்து இளவரசரால் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தையின் இறுதியில் செப்டம்பர் மாதம் பிரித்தானியர்கள் இருவரும் விடுவிக்கப்பட்டனர்.
மட்டுமின்றி, இரண்டு அமெரிக்கர்கள், ஒரு ஸ்வீடன் நாட்டவர், ஒரு குரோஷியன் மற்றும் ஒரு மொராக்கோவுடன் மொத்தம் ஐந்து பிரித்தானியர்கள் ரஷ்ய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு சவுதி அரேபியாவின் ரியாத்துக்கு விமானம் மூலம் அனுப்பப்பட்டனர்.
அங்கிருந்து அவர்கள் சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.