திங்கட்கிழமை மீன் சாப்பிடவேண்டாம்: மகனை இழந்த நிபுணரின் எச்சரிக்கை
பிரபல ஊடகம் ஒன்றில், திங்கட்கிழமை மீன் சாப்பிடவேண்டாம்: பிரபல மருத்துவர் கூறும் வித்தியாசமான காரணம் என ஒரு செய்தி கண்ணில் பட்டது.
மேலை நாட்டவர்கள் இப்படித்தான், எதையாவது சொல்வார்கள் என்று எண்ணிக்கொண்டே, அந்த கட்டுரையை எழுதியது யார் என பார்த்தால், அதன் பின்னால் ஒரு சோக செய்தி இருப்பது தெரியவந்தது.
Image: Getty Images
திங்கட்கிழமை மீன் சாப்பிடவேண்டாம்
அமெரிக்காவில் FDA மற்றும் USDA ஆகிய உணவு பாதுகாப்பு அமைப்புகளில் ஆலோசகராக பணியாற்றியவர் Dr. Darin Detwiler.
Dr. Darin, திங்கட்கிழமை உணவகத்துச் செல்கிறீர்களா? மீன் உணவு சாப்பிடவோ, வீட்டுக்கு வாங்கிச் செல்லவோ வேண்டாம் என்கிறார்.
திங்கட்கிழமை மீன் உணவு சாப்பிட்டால், உங்கள் உடல் நலம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்கிறார் அவர். அதாவது, அமெரிக்காவைப் பொருத்தவரை, வெள்ளிக்கிழமை வரைதான் மீன் சந்தைகள் செயல்படுமாம்.
ஆக, நீங்கள் திங்கட்கிழமை உணவகத்தில் ஆர்டர் செய்யும் மீன், வெள்ளிக்கிழமை வாங்கியதாக இருக்குமானால், அது இரண்டு நாட்கள் வரை பிரிட்ஜில் வைக்கப்பட்ட மீன். அதனால் மீனில் ஏற்படும் மாற்றங்கள் உங்கள் உடல் நலனை பாதிக்கலாம் என்கிறார் Dr. Darin. '
கெட்டுப்போன மீன்களில் histamine என்னும் ஒரு ரசாயனம் சுரக்கும் என்று கூறும் Dr. Darin, அது, Scombroid food poisoning என்னும் பிரச்சினையை ஏற்படுத்தும் என்கிறார். அதனால் உடலில் அரிப்பு, அதீத வியர்வை, வயிற்றுப்போக்கு, தலைவலி மற்றும் வாந்தி முதலான பிரச்சினைகள் ஏற்படும்.
யார் இந்த Dr. Darin Detwiler?
90களில், Dr. Darin Detwilerஉடைய மகனான 16 மாதக் குழந்தை Rileyயை பகல் நேரக் குழந்தைகள் காப்பகம் ஒன்றில் விட்டுவிட்டு அவனது பெற்றோர் பணிக்குச் சென்றுள்ளார்கள்.
அந்த பகல் நேரக் காப்பகத்தில், கெட்டுப்போன மீன் உணவை சாப்பிட்டு food poisoning பிரச்சினையால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தையை அவனது பெற்றோர் கொண்டு விட்டிருக்கிறார்கள். அவனுக்கு வயிற்றுப்போக்கு இருந்துள்ளது.
அந்தக் குழந்தையிடமிருந்து நோய்க்கிருமிகள் மற்ற குழந்தைகளுக்கும் பரவியுள்ளன. அதைத் தொடர்ந்து அமெரிக்காவின் பல பகுதிகளுக்கு அந்த நோய்த்தொற்று பரவியுள்ளது.
E. coli O157:H7 என்னும் அந்த நோய்க்கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்ட 623 பேரில், Dr. Darin Detwilerஉடைய மகனான Rileyயும் ஒருவர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உடல் முழுவதும் டியூப்கள் சொருகப்பட்டு, படாத பாடு பட்டு, அம்மா அப்பாவுடன் வீட்டுக்குப் போக ஏங்கி, பின்னர் சுயநினைவிழந்திருக்கிறான் குழந்தை Riley.
குழந்தையின் வயிற்றில் அறுவை சிகிச்சை ஒன்றைச் செய்து அவனது குடலில் பெரும்பகுதியை வெட்டி எடுத்துள்ளார்கள் மருத்துவர்கள். கோமா நிலைக்குக் கொண்டு செல்லப்பட்ட Riley, பிறகு, அம்மா அப்பா என அழைக்கவேயில்லை. கண் திறக்காமலேயே கண்ணை மூடிவிட்டான் குழந்தை.
அதற்குப் பிறகு உணவு பாதுகாப்புத் துறையில் ஆர்வம் காட்டத்துவங்கிய Dr. Darin, FDA மற்றும் USDA ஆகிய உணவு பாதுகாப்பு அமைப்புகளில் ஆலோசகராக பணியாற்றிய பின், இப்போதும் உணவு பாதுகாப்பு குறித்து கட்டுரைகள் எழுதி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |