நாவூறும் சுவையில் நெல்லூர் காரம் தோசை.., எப்படி செய்வது?
பல குடும்பத்தின் காலை உணவில் பெரும்பாலும் தோசை, இட்லி போன்ற உணவை அதிகளவில் எடுத்துக்கொள்வார்கள்.
அந்தவகையில், நாவூறும் சுவையில் நெல்லூர் காரம் தோசை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- காஸ்மீரி மிளகாய்- 2
- தக்காளி- 2
- சின்ன வெங்காயம்- 10
- பூண்டு பல்- 5
- புளி- சிறிதளவு
- சீரகம்- 1 ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- எண்ணெய்- 2 ஸ்பூன்
- தோசை மாவு- 1 கப்
செய்முறை
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் காஸ்மீரி மிளகாய், தக்காளி, சின்ன வெங்காயம், பூண்டு, புளி, சீரகம் மற்றும் உப்பு சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.
பின் இதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் ஒரு வாணல் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அரைத்த கலவை சேர்த்து நன்கு வதக்கி எடுத்துக்கொள்ளவும்.
இதற்கடுத்து அடுப்பில் ஒரு தவா வைத்து சூடானதும் தோசை ஊற்றி அதன் மேல் அரைத்த கலவை தடவிக்கொள்ளவும்.
இறுதியாக தோசையில் எண்ணெய் சேர்த்து பொன்னிறமாக பொறித்து எடுத்தால் சுவையான நெல்லூர் காரம் தோசை தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |