ரயில்வே பாலத்தின் மீது மோதிய இரட்டை தள பேருந்து: ஸ்காட்லாந்து சாலையில் பரபரப்பு
ஸ்காட்லாந்தில் நடந்த பேருந்து விபத்தில் 8 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
இரட்டை தள பேருந்து விபத்து
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ-வில்(Glasgow) சனிக்கிழமை மாலை இரட்டை தள பேருந்து ஒன்று ரயில்வே பாலத்தில் மோதி விபத்தில் சிக்கியது.
இந்த இரட்டை தள பேருந்து விபத்தில் 8 பேர் வரை காயமடைந்துள்ளனர், அதில் ஒருவர் தீவிரமான மருத்துவ நிலையில் உள்ளார்.
மேலும் ஐந்து பேர் ஆம்புலன்ஸ் மூலம் குயின் எலிசபெத் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
குக் தெருவில்(Cook Street) மாலை 6 மணி அளவில் இந்த விபத்து நடந்தது. அப்போது பாலத்தின் கீழ் இரட்டை தள பேருந்து சிக்கியதால் அதன் மேற்கூரையின் ஒரு பகுதி நொறுங்கியது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஸ்காட்லாந்து பொலிஸார் மற்றும் அவசர சேவை குழுவினர், விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு, விபத்துக்கான காரணம் குறித்து விசாரணையையும் தொடங்கியுள்ளனர்.
சாலைகள் மூடல்
Broomhill மற்றும் Eaglesham இடையே உள்ள 4A வழித்தடத்தில் இயங்கிய இந்த பேருந்து கடுமையான சேதத்தை சந்தித்துள்ளது.
விபத்து நிகழ்ந்த போது பேருந்து எந்த திசையில் சென்று கொண்டிருந்தது என்பது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.
அருகிலுள்ள பல சாலைகள் மூடப்பட்டுள்ளன, மேலும் வாகன ஓட்டிகள் அந்த பகுதியை தவிர்க்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |