செங்கடலில் இரட்டை தாக்குதல்: சரக்கு கப்பல் மீது ஹவுதிகள் தாக்குதல்: 6 பேர் பலி
செங்கடல் பகுதியில் சரக்குக் கப்பல் மீது நடத்தப்பட்ட இரட்டை தாக்குதலில் 6 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
சரக்கு கப்பல் மீது தாக்குதல்
செவ்வாய்க்கிழமை செங்கடலின் பாப் எல்-மந்தேப்(Bab el-Mandeb) நீரிணை பகுதியில் சரக்கு கப்பல் மீது ஈரான் ஆதரவு ஹவுதி படையினர் கொடூரத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
ஓமனின் சலாலா நகரிலிருந்து ஜிபூட்டி வழியாக வந்த எகிப்துக்கு நாட்டுக் சொந்தமான திகமா(Tihamah) என்ற சரக்குக் கப்பல் மீது இந்த தாக்குதலானது நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் நான்கு கப்பல் ஊழியர்கள் மற்றும் இரண்டு மீட்புப் படை பணியாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 3 பேர் பாகிஸ்தானியர்கள் மற்றும் ஒருவர் இந்தோனேசிய நாட்டை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
இந்த தாக்குதலில் மேலும் 10 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர். இது தொடர்பாக ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி படையினர் இன்னும் அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இரட்டை தாக்குதல்
ஹவுதி படையினரின் இந்த தாக்குதலானது இரண்டு கட்டங்களாக நடைபெற்றுள்ளது, முதலில் சரக்கு கப்பலானது நீரிணையை கடந்து செல்லும் போது ஏவுகணை மற்றும் வெடிமருந்து தாக்கியதில் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தாக்குதலின் போதே உயிரிழப்புகள் மற்றும் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து சேதமடைந்த கப்பலில் ஆபத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காக மீட்பு பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்த போது இரண்டாவது முறையாக மற்றொரு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதில் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |