ரூ.2 லட்சம் முதலீடு செய்தால் 2 லட்சம் வட்டி - Post Office வழங்கும் அசத்தல் திட்டம்
எதிர்கால சேமிப்பை கருத்தில் கொண்டு மக்கள் முதலீடு செய்ய மக்கள் திட்டமிட்டாலும், தங்கம்,பங்கு சந்தை, பிட்காயின் என பல்வேறு வாய்ப்புகள் இருந்தாலும், அவற்றில் உத்திரவாதமான நிலையான வருமானம் இருக்காது.
அதேவேளையில், தபால் அலுவலங்கள் பல உத்திரவாதமான முதலீட்டு திட்டங்களை வைத்துள்ளது.
ரூ.2 லட்சம் முதலீட்டில் 2 லட்சம் வட்டி
அதில், பணத்தை இரட்டிப்பாக்கும் "கிசான் விகாஸ் பத்ரா"(KVP - kisan vikas patra) திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த திட்டத்திற்கு, அரசு 7.5 சதவீத வட்டி வழங்குவதால், குறிப்பிட்ட காலத்தில் முதலீட்டு தொகை இரட்டிப்பாகிறது.
இந்த திட்டத்தில் குறைந்த பட்சமாக ரூ.1,000 முதலீடு செய்யலாம். சிறிய அளவிலான முதலீடு செய்ய திட்டமிடுபவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஆனால் அதிகபட்ச வரம்பு நிர்ணையிக்கப்படவில்லை.
இந்த திட்டத்தில், அதிகபட்சமாக 3 பேர் இணைந்து கூட்டுக்கணக்காக கூட தொடங்கி பணம் சேமிக்கலாம்.

இதில் முதலீடு செய்தால், 115 மாதங்களில் பணம் இரட்டிப்பாகும். அதாவது, 9 ஆண்டுகள், 7 மாதங்கள் ஆகும்.
இதில், 2 லட்சம் முதலீடு செய்தால், 115 மாதங்களில் 2 லட்சம் வட்டியுடன் ரூ.4 லட்சம் கிடைக்கும்.
இது அரசின் உத்திரவாதமான திட்டம் என்பதால் மக்கள் நம்பிக்கையுடன் முதலீடு செய்து, தங்கள் பணத்தை இரட்டிப்பாகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |