டசின் கணக்கான சிறார் பணயக்கைதிகள்... ஹமாஸ் படைகள் வெளியிட்ட பதறவைக்கும் தகவல்
இஸ்ரேலில் இருந்து கடத்தப்பட்ட டசின் கணக்கான சிறார் பணயக்கைதிகள் காஸாவில் சில குழுக்களின் பிடியில் சிக்கியுள்ளதாக ஹமாஸ் படைகள் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திங்களன்று இரவு முடிவுக்கு வரும்
இஸ்ரேல் - ஹமாஸ் படைகளுக்கிடையே முன்னெடுக்கப்பட்டுள்ள நான்கு நாள் போர்நிறுத்த ஒப்பந்தமானது திங்களன்று இரவு முடிவுக்கு வரும் நிலையில், மேலும் சில நாட்கள் நீட்டிக்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேல் பிரதமருக்கு அழுத்தம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
@rex
இதனிடையே, நான்கு நாள் போர்நிறுத்தத்தை நீட்டிக்க தயாராக இருப்பதாக இஸ்ரேல் கூறியுள்ளது, ஆனால் மீதமுள்ள 200 பணயக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் சம்மதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளது.
மேலும் விடுவிக்கப்படும் ஒவ்வொரு பத்து பணயக்கைதிகளுக்கும் கூடுதல் நாள் போர்நிறுத்தத்தை இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது. அதன் பின்னர் முழு வீச்சில் போர் முன்னெடுக்கப்படும் எனவும் பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் படைகளால் கடத்தப்பட்ட 40 பெண்கள் மற்றும் சிறார்களை விடுவித்தால் மட்டுமே எந்த ஒப்பந்தமும் முன்னெடுக்கப்படும் என்று கத்தார் பிரதமரும் குறிப்பிட்டுள்ளார்.
@reuters
ஆனால், அவர்கள் தொடர்பில் தங்களுக்கு எந்த தகவலும் இல்லை எனவும், அடையாளம் தெரியாத குழுக்களிடம் அவர்கள் சிக்கியிருக்கலாம் என ஹமாஸ் படைகள் தெரிவித்துள்ளது.
எண்ணிக்கை தங்களிடம் இல்லை
எஞ்சியிருக்கும் பெண்கள் மற்றும் சிறார்களை விடுவித்தால் மட்டுமே, போர்நிறுத்தம் நீட்டிக்கப்படுமா என்பது குறித்து பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் படைகளிடம் சிக்கியுள்ள பணயக்கைதிகள் தொடர்பான எண்ணிக்கை தங்களிடம் இல்லை என குறிப்பிட்டுள்ள கத்தார் பிரதமர், மாயமானவர்களை தேடும் பொறுப்பு தற்போது ஹமாஸ் படைகளுக்கு உள்ளது என்றார்.
@afp
இதனிடையே, இந்த போர் நிறுத்தமானது, ஹமாஸ் படைகளை ஒருங்கிணைக்கும் ஒரு யுத்தி என்றும் அஞ்சப்படுகிறது.
நான்கு நாள் போர்நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் உள்ள 150 பாலஸ்தீனியர்களுக்கு ஈடாக 50 இஸ்ரேலிய பெண்கள் மற்றும் குழந்தைகளை விடுவிக்க கடந்த வாரம் கத்தார் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |