பிரான்ஸில் மோதிக் கொண்ட இரண்டு டிராம்கள்: பயணிகள் பலருக்கு படுகாயம்!
பிரான்ஸில் இரண்டு டிராம்கள் மோதி விபத்து சம்பவத்தில் பல பயணிகள் காயமடைந்துள்ளனர்.
பிரான்ஸில் டிராம்கள் விபத்து
பிரான்சின் கிழக்குப் பகுதியில் உள்ள ஸ்ட்ராஸ்பர்க்(Strasbourg) நகரில் சனிக்கிழமை இரண்டு டிராம்கள் மோதிய விபத்து சம்பவத்தில் பல பயணிகள் காயமடைந்தனர்.
பாரிஸ் தவிர்த்து பிரான்சில் மிகவும் பரபரப்பான ரயில் நிலையங்களில் ஒன்றான இந்த நகரின் பிரதான ரயில் நிலையத்திற்கு அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
🚨🚈🇫🇷 ALERTE - Un tramway vient d’en percuter un autre à l’arrêt, à Strasbourg. Au moins 30 blessés. (Actu 17) pic.twitter.com/5OerJyBrc8
— AlertesInfos (@AlertesInfos) January 11, 2025
ஆரம்பகட்ட தகவல்களின்படி, நிலையத்தின் சுரங்கப்பாதையில் இரண்டு டிராம்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டுள்ளன. இதில் இரு வாகனங்களுக்கும் கடுமையான சேதம் ஏற்பட்டது. மேலும் மோதலின் விளைவாக ஒரு ட்ராம் தண்டவாளத்தை விட்டு விலகியது.
உயிரிழப்புகள் எதுவும் இல்லை
விபத்திற்கான துல்லியமான காரணம் பொது குற்றவியல் அலுவலகத்தால் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகிறது.
இருப்பினும், உயிரிழப்பு ஏதும் இல்லை என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த மோதல் போக்குவரத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியதுடன், பல பயணிகளுக்கு லேசான காயங்கள் முதல் கடுமையான முறிவுகள் வரை பல்வேறு வகையான காயங்களால் பாதிக்கப்பட்டனர்.
தீயணைப்பு வீரர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் உள்ளிட்ட அவசர மருத்துவப் பணியாளர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
அங்கு காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்து மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |