ஹார்முஸில் அமெரிக்க, இஸ்ரேலிய கப்பல்களைத் தடை செய்யும் மசோதா
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் பிற எதிரிகளின் கப்பல்களை ஹார்முஸ் நீரிணையில் தடை செய்ய ஈரான் திட்டம்.
அமெரிக்க, இஸ்ரேலிய மற்றும் பிற எதிரிகளின் கப்பல்கள் ஹார்முஸ் நீரிணையைக் கடந்து செல்வதைத் தடுக்கும் ஒரு பூர்வாங்க மசோதாவை ஈரானிய நாடாளுமன்றக் குழு ஒன்று ஆய்வு செய்து வருகிறது.
20 சதவீதம் அபராதம்
குறித்த தகவலை ஈரானிய அரசாங்கத்திற்கு நெருக்கமான ஃபார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்மொழியப்பட்ட கட்டுப்பாடுகளை மீறினால், கப்பலில் உள்ள சரக்கின் மதிப்பில் 20 சதவீதம் வரை அபராதம் விதிக்கும் வகையில் இந்த வரைவு மசோதா அமைந்துள்ளது.

சட்டவரைவு இறுதி செய்யப்படுவதற்கு முன்னதாகப் பரிந்துரைகளைச் சமர்ப்பிக்குமாறு நிபுணர்களுக்கு நாடாளுமன்றம் அழைப்பு விடுத்துள்ளதாகவும், அந்தச் சட்டம் இன்னும் நிபுணர்களின் ஆய்வில் இருப்பதாகவும் ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் போருக்கு முன்னர், அந்த நீரிணையில் எவித்தக் கட்டுப்பாடுகளும் இன்றி, எண்ணெய் மற்றும் வணிகக் கப்பல்கள் போக்குவரத்தை முன்னெடுத்து வந்தது.
ஆனால், போர் தொடர்பில் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு அழுத்தமளிக்கும் வகையில், ஈரான் நிர்வாகம் ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தை முடக்கியது.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா
இருப்பினும் சீனா உள்ளிட்ட குறிப்பிட்ட சில நாடுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. ஈரானின் ஏவுகணை பலம் மற்றும் அணு ஆயுதத்திற்கான முயற்சிகளை முடக்கும் வகையில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா போர் தொடுத்த நிலையில், அமெரிக்காவின் இலக்கு பின்னர் ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தை முன்னெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக இருந்தது.

இதனையடுத்து வலுவானத் தாக்குதலை முன்னெடுத்த அமெரிக்காவுக்கு பதிலடியாக மத்திய கிழக்கு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.
தற்போது போருக்கான ஆயுதங்கள் மொத்தம் செலவிட்டுள்ள நிலையில், அமெரிக்கா இந்த நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து தப்பிக்க முடியாமல் சிக்கியுள்ளதாகவே போர் தொடர்பிலான ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |