டிராவிட் எடுத்த அந்த துணிச்சல் முடிவு தான் இலங்கையை நாங்க ஜெயிக்க காரணம்! வெற்றியின் ரகசியத்தை கூறிய புவனேஷ்வர் குமார்
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமார், இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான வெற்றியின் ரகசியத்தை கூறியுள்ளார்.
இதில் குறிப்பாக, எட்டாவது வீரராக களமிறங்கிய தீபக் சஹார் 2 பந்துகளில் 7 பவுண்டரி ஒரு சிக்சர் என 69 ஓட்டங்கள் குவித்தார். புவனேஷ்வர் குமார் 19 ஓட்டங்கள் எடுத்து அவருக்கு சிறந்த பார்டனர்ஷிப் ஆட்டத்தை கொடுத்தார்.
இந்த ஜோடி கடைசிவரை அவுட்டாகமல் இந்தியாவுக்கு வெற்றியை தேடித்தது.
இந்நிலையில், இந்த போட்டி முடிந்த பின் புவனேஷ்குமார் வெற்றி குறித்து கூறுகையில், தீபக் சாஹர் பேட்டிங்கில் ஓரளவுக்கு சிறப்பாக கை கொடுக்க கூடியவர் என்பதை டிராவிட் முன்கூட்டியே அறிந்து வைத்துள்ளார்.
ஏனெனில் ரஞ்சி கோப்பைக்கு இந்திய ஏ அணியை தயார் செய்த டிராவிட்டின் கீழ் ஏற்கனவே தீபக் சாஹர் விளையாடியுள்ளார் .
இதன் காரணமாக அவரின் பேட்டிங் திறமை குறித்து அவருக்கு தெரிந்திருக்கிறது.
இதன் காரணமாகவே, எனக்கு முன்னால் தீபக் சாகரை பேட்டிங் செய்ய டிராவிட் களமிறங்கினார். அவரின் இந்த முடிவு தற்போது வெற்றிகரமாக அமைந்துள்ளது என புவனேஸ்வர் கூறியுள்ளார்.