டிராவிட்டிற்கு இந்திய கிரிக்கெட்டில் புதிய பொறுப்பு? - RR அணிக்கு பயிற்சியாளராகும் இலங்கை வீரர்?
RR அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகிய டிராவிட்டிற்கு இந்திய கிரிக்கெட்டில் புதிய பொறுப்பு வழங்கப்பட உள்ளது.
டிராவிட்டிற்கு புதிய பொறுப்பு?
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரான ராகுல் டிராவிட், தனது பதவிக்காலம் முடிந்ததும் 2024 ஆம் ஆண்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளராக இணைந்தார்.
இந்நிலையில், 2026 ஐபிஎல் தொடருக்கு முன்னர், டிராவிட் அந்த பதிவியில் இருந்து விலகிக்கொள்வார் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைமை பொறுப்புக்கு டிராவிட்டை நியமிக்க பிசிசிஐ ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேசிய கிரிக்கெட் அகாடமியானது, இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அடுத்த தலைமுறை வீரர்களை உருவாக்குவது, காயமடைந்த வீரர்களை மீட்டு கொண்டு வருவது ஆகியவற்றுக்காக பிசிசிஐயால் உருவாக்கப்பட்ட அமைப்பு ஆகும்.
மீண்டும் சங்கக்காரா?
தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக உள்ள விவிஎஸ் லக்ஷ்மணன் அந்த பொறுப்பில் இருந்து விலகி, ஐபிஎல் அணிக்கு பயிற்சியாளராக ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.
அதேவேளையில், தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இயக்குநராக உள்ள குமார் சங்கக்காரா, 2021 முதல் 2024 ஆம் ஆண்டில் ராகுல் டிராவிட் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்கும் வரை, அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்தார்.
தற்போது மீண்டும், சங்கக்காரா ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பை ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |