காங்கோவில் எபோலா பரவல் தீவிரம் - 181 பேர் உயிரிழப்பு
காங்கோ ஜனநாயகக் குடியரசில் (DRC) எபோலா வைரஸ் பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, ஒரே நாளில் 72 புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.
இதனால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 782-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 32 பேர் உயிரிழந்ததால், மொத்த மரண எண்ணிக்கை 181-ஆக அதிகரித்துள்ளது.

இந்த பரவல் புண்டிபுக்யோ (Bundibugyo) எனப்படும் அரிதான எபோலா வகை வைரஸால் ஏற்பட்டுள்ளது. இதற்கு தற்போது எந்த தடுப்பூசியும், சிகிச்சையும் இல்லை. இதனால் நிலைமை மிகுந்த கவலைக்குரியதாக உள்ளது.
சுகாதார அதிகாரிகள், நோயாளிகள் தப்பிச் செல்லுதல், தொடர்பு கண்காணிப்பு குறைபாடு, மற்றும் பிராந்திய மோதல்கள் காரணமாக பரவலை கட்டுப்படுத்துவது கடினமாகி வருவதாக தெரிவித்துள்ளனர்.
தற்போது தொடர்பு கண்காணிப்பு 56.5 சதவீதம் மட்டுமே நடைபெறுகிறது, இது இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 95 சதவீத அளவிற்கு மிகவும் குறைவானது.
“Doctors Without Borders” அமைப்பு, உண்மையான பாதிப்பு அளவு இன்னும் தெரியவில்லை என எச்சரித்துள்ளது. Ituri மாகாணம் பரவலின் மையமாக உள்ளது, அங்கு 95 சதவீத நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். வைரஸ் North Kivu, South Kivu மாகாணங்களுக்கும் பரவி, உகாண்டாவுக்கும் சென்றுள்ளது.
ஆப்ரிக்க CDC தலைவர் Jean Kaseya, “பரவலை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு உடனடி நிதி உதவி தேவை” என தெரிவித்திட்டுள்ளார். தற்போது 21.5 மில்லியன் டொலர் நிதி பற்றாக்குறை உள்ளது.
காங்கோவில் நீண்டகால ஆயுத மோதல்கள், மக்கள் இடம்பெயர்வு, மற்றும் சுரங்கப்பணிகள் காரணமாக நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |