மீண்டும் பயன்பாட்டுக்கு வந்த Dream11 செயலி - புதிய மாற்றங்கள் என்ன?
தடை செயப்பட்ட Dream11 செயலி மீண்டும் புதிய வடிவில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
சேவையை நிறுத்திய Dream11
இந்தியாவில் பேண்டஸி கிரிக்கெட் துறையில் Dream11 நிறுவனம் ஆதிக்கம் செலுத்தி வந்தது.

220 மில்லியனுக்கு அதிகமான பயனர்கள் Dream11 செயலியை பயன்படுத்தியதாகவும், 2023 நிதியாண்டில் மட்டும் Dream11 நிறுவனம் ரூ. 6,384 கோடி வருவாய் ஈட்டியதாக கூறப்படுகிறது.
மேலும், ஐ.பி.எல், இந்திய கிரிக்கெட் அணிக்கு ஸ்பான்ஸராகவும் மாறியது.

கடந்த ஆகஸ்ட் மாதம் Promotion & Regulation of Online Gaming Bill 2025 என்ற சட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
ஆன்லைனில் பணம் செலுத்தி விளையாடும் பந்தயம் அல்லது சூதாட்டம் அடிப்படையிலான விளையாட்டுகளை இந்த சட்டம் தடை செய்கிறது.
அதன்படி, Dream11 செயலியும் தனது பணம் செலுத்தி விளையாடும் விளையாட்டை நிறுத்துவதாக அறிவித்தது. மேலும், Dream11 உடனான ஸ்பான்ஸர்ஷிப் ஒப்பந்தத்தையும் பிசிசிஐ ரத்து செய்தது.
மீண்டும் வந்த Dream11
3 மாதங்களுக்கு பிறகு, நேற்று ட்ரீம்11 செயலி மீண்டும் ப்ளே ஸ்டோரில் இடம்பெற்றுள்ளது. இதில், பயனர்கள் முக்கிய படைப்பாளர்களின் நேரடி ஒளிபரப்புகளைப் பின்தொடர அனுமதிக்கிறது.

இதில் பயனர்கள் நேரலையை தொடர்ந்து பார்ப்பதை ஊக்குவிக்க அதன் விசுவாச திட்டத்தின் ஒரு பகுதியாக DreamBucks வழங்கப்படுகிறது. அதனை shoutouts மூலம் படைப்பாளர்களுக்கு வழங்கலாம்.
கிடைக்கும் வருவாயில் பெரும் தொகையை படைப்பாளர்களுக்கு வழங்க உள்ளதாக Dream11 தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில் இலவசமாக விளையாடக்கூடிய மாதிரிக்கு Dream11 மாறியது. இதனால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட விளம்பரங்கள் மற்றும் ஸ்பான்சர்ஷிப்களால் ஆதரிக்கப்பட்டது. ஸ்விக்கி, ஆஸ்ட்ரோடாக் மற்றும் டாடா நியூ போன்ற பிராண்டுகள் விளம்பரதாரர்களாக இணைந்தது.
அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 11 நாடுகளில் தனது இலவச விளையாட்டு தளத்தை விரிவாக்கம் செய்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |