பிரியங்கா சோப்ரா அணிந்திருக்கும் ஆடையின் விலை எவ்வளவு தெரியுமா?
நடிகை பிரியங்கா சோப்ரா அணிந்திருக்கும் ஆடையை பற்றி தான் தற்போது பலரும் பேசி வருகின்றனர்.
எவ்வளவு விலை?
செப்டம்பர் 30 அன்று மும்பையில் நடந்த பிவல்காரி செர்பென்டி இன்பினிட்டோ கண்காட்சியில் சமீபத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா ஸ்டைலாக தோன்றியதன் மூலம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
ரசிகர்களும், ஃபேஷன் ஆர்வலர்களும் பிரியங்கா சோப்ராவின் கவர்ச்சியான உடை, அணிகலன்கள் குறித்து பேசுகின்றனர்.
இந்த நிகழ்வில் metallic shimmer துணியால் வடிவமைக்கப்பட்ட Maticevski-ன் பர்கண்டி மிடி உடையை அணிந்திருந்தார் பிரியங்கா சோப்ரா.
இந்த உடையில் ஒரு பிளங்கிங் V-நெக்லைன் மற்றும் பாடிகான் சில்ஹவுட் ஆகியவை இடம்பெற்றிருந்தன, இது அவரது உடையை அழகாக எடுத்துக்காட்டுகிறது.
இந்த ஆடையின் விலை 1,880 டொலர் ஆகும். அதாவது இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.1.67 லட்சம் ஆகும். இது அதன் உயர் தரம் மற்றும் கைவினைத்திறனை பிரதிபலிக்கிறது.
அதுமட்டுமல்லாமல் பளபளப்பான வைர நகைகளையும் அணிந்திருந்தார் பிரியங்கா சோப்ரா. அதில் ஒரு நெக்லஸ், வளையல், மோதிரம் மற்றும் வளைய காதணிகள் ஆகியவை அடங்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |