இளநீரை விட பல மடங்கு நன்மை அளிக்கும் பானத்தை தெரிந்து கொள்ளுங்கள்
இளநீரை விட பல மடங்கு பயனை கொடுக்கக்கூடிய பானத்தை பற்றி கட்டாயம் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
என்ன பானம்?
ஒரு மனிதருக்கு ஆரோக்கியம் என்பது மிக மிக முக்கியம். அது நமது உடலை பராமரிப்பது முதல் எந்த மாதிரியான உணவை உட்கொள்கிறோம் என்பது வரை அடங்கியுள்ளது.
அதிலும், நமது குடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது. ஏனென்றால், நோய் எதிர்ப்பு சக்தி, மனநிலை மற்றும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் நன்றாக இருப்பதற்கு குடல் ஆரோக்கியம் முக்கியமானது.
அதில் நமது செரிமானமும் அடங்கியிருக்கிறது. நமது செரிமான மண்டலத்தில் இருக்கும் பாக்டீரியாக்கள் சமநிலையான இருந்தால் தான் குடலும் நன்றாக இருக்கும்.
இப்போது நாம் தெரிந்து கொள்ளப்போவது இளநீரை விட உடலுக்கு பல மடங்கு நன்மை தரக்கூடிய மோரை பற்றி தான். இதனை அருந்தினால் எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படாது.
பால் மோராக மாற்றப்படும் நொதித்தல் நிகழ்வால் வயிற்றில் உள்ள நல்ல பாக்டீரியாக்களுக்கு உதவுகிறது. மேலும், இதில் உள்ள லாக்டோ பேசில்லஸ் பாக்டீரியாவானது குடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
மோருடன் நாம் உப்பி சேர்த்து குடிப்பதால் உடலுக்கு எலக்ரோலைட்ஸ் போல செயல்படும். இது, நீரிழப்பு பிரச்சனை மற்றும் செரிமானத்திற்கு உதவுவது மட்டுமல்லாமல் நச்சுநீக்கியாக செயல்படுகிறது.
அதுமட்டுமல்லாமல், மன அழுத்தம், இரத்தசோகை உள்ளவர்களுக்கு ஏற்ற பானம் மோர் தான். இது, கொழுப்பு அளவை குறைக்க உதவுவதால் இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
சரும ஆரோக்கியம் மற்றும் எடையை குறைப்பதற்கு மோர் முக்கிய பங்கு வகிக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |