தினமும் இப்படி காபி குடிப்பதால் உடல் எடையை இவ்வளவு வேகமாக குறைக்கலாமாம்!!
பெரும்பாலானோர் கோப்பியினை முக்கிய ஒரு பங்காக தன் வாழ்கையில் கொண்டுள்ளன.
காபி குடிப்பதால் உடல் எடை குறையும் என்பது யாரும் அறியாயததே.
ஆனால் அது குடிப்பதால் உடல் எடை குறையுமாம்.
கோப்பியில் மெக்னீசியம், பொட்டாசியம், நியாசின் மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும் சக்திவாய்ந்த ஊட்டச்சத்துக்கள் உள்ளன. எனவே கொழுப்பை எரிக்க, மெல்லிய இடுப்பை பெற காபி உதவும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
வீட்டில் இருந்தப்படியே இலகுவாக எடையை குறைக்கும் ஒரு முறைப் பற்றி பார்க்கலாம்.
இலவங்கப்பட்டை இஞ்சி கோப்பி ( Cinnamon Ginger Coffee)
தேவையான பொருட்கள்:
- இஞ்சி பவுடர் - தேவையான அளவு
- எஸ்பிரெஸ்ஸோ ஷாட் (Espresso Shot) - 40 மிலி
- இலவங்கப்பட்டை பவுடர்- 1/4 தே.கரண்டி
- ஜாதிக்காய் பவுடர் - 1/4 தே.கரண்டி
- வெண்ணிலா எக்ஸ்ட்ராக்ட் - 1/4 தே.கரண்டி
- தேன் - 1 தே.கரண்டி
- குறைந்த கொழுப்புள்ள சூடான நுரையுள்ள பால் - 120 மிலி
செய்முறை:
- முதலில் ஒரு கோப்பி கப்பில் இஞ்சி பவுடரை சேர்க்கவும்.
- பின்னர் தேன், இலவங்கப்பட்டை பவுடர், வெண்ணிலா எக்ஸ்ட்ராக்ட் ஒன்றாக சேர்த்து பீட்டரை கொண்டு நன்கு கலக்க வேண்டும்.
- பின் இந்த கலவையின் மீது ஒரு ஷாட் எஸ்பிரெஸ்ஸோவை ஊற்றி நன்கு கலக்கவும்.
- இதோடு சேர்த்து எடுத்து வைத்திருக்கும் சூடான பால் சேர்த்து நன்கு கலக்கவும்.
- இதன் மேல் ஜாதிக்காய் பவுடர் மற்றும் இலவங்கப்பட்டை சேர்த்து அருந்த வேண்டும்.
மசாலா மொச்சை (Spiced Mocha)
தேவையான பொருட்கள்:
- எஸ்பிரெஸ்ஸோ ஷாட் - 40 மிலி
- சிவப்பு சீனி -2 தே.கரண்டி
- கோகோ பவுடர் - 4 தே.கரண்டி
- இலவங்கப்பட்டை பவுடர் - 1/4 தே.கரண்டி
- கார வரமிளகாய் பவுடர் - 1/2 தே.கரண்டி
- வெண்ணிலா சிரப் - 1 தே.கரண்டி
- குறைந்த கொழுப்புள்ள சூடான நுரையுள்ள பால் - 120 மிலி
செய்முறை:
- ஒரு கிண்ணத்தில் பொடித்த சிவப்பு சீனி , இலவங்கப்பட்டை பவுடர், ஜாதிக்காய் பவுடர் மற்றும் கார வரமிளகாய் பவுடர் உள்ளிட்டவற்றை சேர்க்க வேண்டும்.
- பின்னர் கோகோ பவுடரை கலக்கவும்.
- இந்த கலவையின் மீது ஒரு ஷாட் எஸ்பிரெசோவை ஊற்றி நன்கு கிளறி கலக்க வேண்டும்.
- பின் இதோடு வெண்ணிலா சிரப் சேர்த்து கலக்கவும்.
- சில நிமிடங்கள் கழித்து இந்த கலவையில் குறைந்த கொழுப்புள்ள சூடான நுரையுள்ள பாலை சேர்த்து கலக்கவும். பின்னர் குடிக்கலாம்.
இவ்வாறு இதனை குடித்து வந்தால் இடுப்பில் இருக்கும் கொழுப்பு குறையும் மற்றும் உடம்பில் உள்ள கொழுப்பும் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.